Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs RR: டாஸ் தோற்றதில் மகிழ்ச்சி: ரியான் பராக் சொன்ன காரணம் என்ன?

2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் 53வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேசுகையில், "'நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். ஆடுகளம் மிகவும் காய்ந்து போய் உள்ளது. இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது அது சற்று மந்தமாக மாறும். நாங்கள் நிறைய ஸ்கோர் அடித்து, அதை வைத்து வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறோம். எளிமையாக ஆட வேண்டும் என்று நினைக்கிறோம்."

IPL 2025 KKR Wins Toss vs RR at Eden Gardens Rahane Opts to Bat Riyan Parag Happy with Toss Loss

"ஒரு நேரத்தில் ஒரு போட்டியை சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம். கடந்த போட்டியில் எங்கள் அணியில் அனைவரின் ஆட்டமும் நன்றாக இருந்தது. சூழ்நிலையைப் புரிந்துகொண்டு விரைவாக அதற்கு ஏற்ப விளையாட வேண்டும். எங்கள் அணியில் மொயின் அலி மற்றும் ரமந்தீப் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பி இருக்கிறார்கள்'" என்றார் அஜிங்க்யா ரஹானே.

டாஸ் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பேசுகையில், டாஸ் தோல்வியடைந்ததில் மகிழ்ச்சி எனவும், இந்த விளையாட்டு மிகவும் சவாலானது எனவும் தெரிவித்தார். "நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. இனி நாங்கள் எங்களின் பெருமைக்காக விளையாடுவோம். ஆடுகளத்தில் அதிக சக்தியை வெளிப்படுத்துவோம். ஒட்டுமொத்தமாக எங்களது முயற்சியை வெளிப்படுத்துவோம்'" என்றார் ரியான் பராக்.

அணிகள்:

ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் 11): யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக்(கேப்டன்), குனால் சிங் ரத்தோர், துருவ் ஜுரெல்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, யுத்விர் சிங் சரக், ஆகாஷ் மாத்வால்

ராஜஸ்தான் ராயல்ஸ் இம்பேக்ட் வீரர்கள்: குமார் கார்த்திகேயா, ஷுபம் தூபே, துஷார் தேஷ்பாண்டே, க்வெனா மபாக்கா, அசோக் ஷர்மா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் 11): ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, மொயீன் அலி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ராம்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இம்பேக்ட் வீரர்கள்: மனீஷ் பாண்டே, ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், ரோவ்மன் பவல், லவ்னித் சிசோடியா

Story first published: Sunday, May 4, 2025, 15:39 [IST]
Other articles published on May 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+