Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- ராகுல், ரிஷப் பண்ட் வேறு அணிக்கு செல்வது உறுதி.. டெல்லி, லக்னோ வீரர்கள் விவரம்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் இறுதியில் தொடங்க உள்ள நிலையில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைக்க போகிறது என்பது தொடர்பான அறிவிப்பு தீபாவளி அன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில் டெல்லி அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பந்த் மற்றும் லக்னோ அணியின் கேப்டனான கே எல் ராகுல் ஆகியோர் இருவரும் வேறு அணிக்கு செல்ல முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை பெற்ற கே கே ஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரூ ரஸில் ஆகியிரும். வேறு அணிக்கு செல்ல முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ipl 2025 kl rahul rishabh pant bumrah 2025

இதனால் வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் டெல்லி அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். டெல்லி அணி அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ஜேக் பிரேசர் ஆகியோரை தக்க வைக்க வாய்ப்பு இருக்கிறது.

இதேபோன்று அபிஷேக் போரெலையும் அன்கேப்ட் வீரராக டெல்லி அணி தக்க வைக்கப்போகிறது. இதன் மூலம் டெல்லி அணியிலிருந்து ரிஷப் பன்ட் அணியில் இருந்து வெளியேறப் போகிறார். இதேபோன்று லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் விலகப் போகிறார். அவருக்கு பதில் முதலாவது வீரராக நிக்கோலஸ் பூரான், இரண்டாவது வீரராக ரவி பிஸ்னாய், மூன்றாவது வீரராக மாயங் யாதவ், நான்காவது வீரராக ஆயுஷ் பதோனி மற்றும் ஐந்தாவது வீரராக மோஷின் கான் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம்.

அது மட்டும் அல்லாமல் மார்க்கஸ் ஸ்டோனிஸ் அல்லது குருனல் பாண்டியா ஆகியோரை ஆர் டி எம் கார்டு மூலம் ஏலத்தில் எடுக்க லக்னோ அணி முடிவு எடுத்திருக்கிறது. இதேபோன்று ராஜஸ்தான் அணி பட்லரை விடுவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.இதன் மூலம் ஜெய்ஸ்வால், சாம்சன், ரியான் பராக், ஹைட்மயர், துருவ் ஜூரல் சந்திப் ஷர்மா ஆகியோரை தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதேபோன்று பஞ்சாப் அணி வெறும் இரண்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்கிறது. ஷசாங் சிங் மற்றும் பிராப் சிம்ரன்சிங் என இரண்டு வீரர்களை நான்கு கோடி ரூபாய்க்கு uncapped வீரராக தேர்வு செய்ய உள்ளது. இவர்களை தவிர மற்ற வீரர்களை எல்லாம் ஏலத்தில் மூலம் rtm கார்டை வைத்து தக்க வைத்துக் கொள்ள பஞ்சாப் அணி முடிவு எடுத்திருக்கிறது.

Story first published: Wednesday, October 30, 2024, 22:58 [IST]
Other articles published on Oct 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+