Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: அவமானப்படுத்திய லக்னோ உரிமையாளருக்கு பதிலடி தந்த ராகுல்.. லக்னோவை வீழ்த்தியது டெல்லி

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது. தனது முன்னாள் அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா முன்பு ராகுல் தனி ஆளாக நின்று அரை சதம் விளாசி தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் மார்க்கரம் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 33 பந்துகளில் அவர் 52 ரன்கள் சேர்த்தார்.

LSG vs DC

அதேபோன்று மிச்சல் மார்ஸ் 45 ரன்கள் எடுக்க முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 87 ரன்கள் எடுத்தது. இதேபோன்று இந்த தொடரில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரான் கடந்த இரண்டு இன்னிங்ஸ்களாக தடுமாறுகிறார். இன்று கூட அவர் ஐந்து பந்துகளை எதிர் கொண்டு 9 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அப்துல் சமத் 8 பந்துகளை எதிர் கொண்டு வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே சேர்க்க டேவிட் மில்லர் 14 ரன்கள் எடுத்தார். அயூஷ் பதோனி மட்டும் ஆறு பவுண்டரிகள் விளாசி 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். கேப்டன் பந்த் அவுட் ஆக லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அபிஷேக் போரெல் 36 பந்துகளில் 51-ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். கருண் நாயர் 9 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
இந்த சூழலில் மூன்றாவது வீரராக விளையாடிய ராகுல் தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த போது அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ராகுலை அணியை விட்டு நீக்கிவிட்டு தமக்கு வெற்றியை பெற்று தரும் வீரர்தான் தேவை என்று திமிராக சஞ்சீவ் கோயங்கா பதில் அளித்தார்.

தற்போது அவருடைய முகத்தில் கறியை பூசும் விதமாக 42 பந்துகளில் அவர் 57 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தால் இதில் மூன்று பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். கேப்டன் அக்சர் 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு சிக்சர் அடங்கும். இதனால் டெல்லி அணி 17.5 ஓவர் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது.

Story first published: Tuesday, April 22, 2025, 23:11 [IST]
Other articles published on Apr 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+