For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IMPACT பிளேயர் விதி எதுக்கு? அஸ்வினுக்கு சாபம் விட்ட ஸ்ரீகாந்த்.. யூடியூப்பில் நடந்த காரசார விவாதம்

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்பெல்லாம் ஐபிஎல் தொடரில் 180, 190 ரன்கள் அடித்தாலே அது மிகப்பெரிய இலக்காக கருதப்படும். ஆனால் தற்பொழுது சர்வ சாதாரணமாக ஒவ்வொரு அணியும் 200 ரன்களுக்கு மேல் அடித்து அதனை சேஸூம் செய்கிறார்கள்.

இதற்கு காரணம் இம்பேக்ட் பிளேயர் என்ற விதி தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக ஆல்ரவுண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இதனால் இந்த விதியை நீக்க வேண்டும் என பல்வேறு அணிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

r ashwin cricket kris srikanth

விதி காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் நல்ல பயனை பெற்று வருகிறது. குறிப்பாக சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி, தற்போது எல்லாம் இம்பாக்ட் வீதி காரணமாக பேட்டிங் செய்யவே வருவதில்லை. அப்படி வந்தாலும் கடைசி கட்டத்தில் தான் விளையாடுகிறார். இதன் மூலம் வெறும் விக்கெட் கீப்பிங் மட்டும் செய்துவிட்டு தோனி ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து விடுகிறார்.

இந்த நிலையில் இம்பேக்ட் வீதி கண்டிப்பாக வேண்டும் என்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்திருந்தார். இதனால் அஸ்வினை வரவழைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் யூடிபில் காரசார விவாதம் ஒன்றை நடத்தினார். அதில் முதலில் பேசிய அஸ்வின் இம்பேக்ட் விதி கண்டிப்பாக வேண்டும். இது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆட்டத்தை மேலும் சுவாரசியமாக மாற்றுகிறது.

கிரிக்கெட் என்பதே யுக்திகளை வகுத்து எதிரணியை வீழ்த்துவது தான். அப்படி இருக்கும் போது இம்பேக்ட் வீர விதி ஒவ்வொரு அணிக்கும் யுத்தியை வகுப்பதில் கடும் சவால்களை தருகிறது. மேலும் இம்பேக்ட் வீதி காரணமாக பல இந்திய வீரர்களின் திறமை வெளிப்பட்டு இருக்கிறது. சிஎஸ்கேவுக்கு சிவம் துபே, ராஜஸ்தானுக்கு துருவ் ஜூரல் போன்ற வீரர்கள் எல்லாம் இம்பாக்ட் விதியின் காரணமாக தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார்கள்.

இதனால் இம்பேக்ட் விதி கூடுதலாக ஒரு வீரருக்கு வாய்ப்பைத் தருகிறது. இதனை பிசிசிஐ தொடர்ந்து இந்த விதியை வைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், கிரிக்கெட்டின் விதியே 11 வீரர்கள் களத்தில் நின்று விளையாடுவது தான். கால்பந்தில் அப்போதிலிருந்தே சப்ஸ்டியூட் என்ற விதி இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டில் அப்படி எந்த விதியும் இல்லை.

அதுதான் தொடர வேண்டும். களத்தில் 11 பேர் நின்று ஒரு விஷயத்தை சாதிக்க முடியவில்லை என்றால், எதற்காக கூடுதலாக ஒரு வீரர் களத்திற்கு வந்து அதை செய்ய வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் முடியவில்லை தான். இதற்காக நான் வேறு ஒரு வீரரை அழைத்து வருகிறேன் என்று சொல்வது எல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களிடம் எட்டாவதாக ஒரு பேட்ஸ்மேன் ஆல் ரவுண்டரோ இல்லையென்றால் அது உங்களுக்கான பிரச்சனை.

அதற்கு, நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.இம்பேக்ட் விதி அஸ்வின் சொல்வது போல் வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஏற்கனவே களத்தில் இருக்கும் வீரரின் வாய்ப்பை தான் அது பறிக்கிறது. பந்துவீச்சில் அஸ்வின் விக்கெட் எடுக்க முடியவில்லை என்றால் கூடுதலாக ஒரு வீரரை சேர்க்கிறார்கள். அப்போது அது அஸ்வினின் திறனை பாதிக்காதா?

அந்த போட்டியில் களமிறங்கும் வீரர்கள் தான் விக்கெட்டை எடுக்க வேண்டும்.மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு ஒரு பேட்ஸ்மேன் தேவை என்று சாலையில் சென்று கொண்டிருந்தவரை அழைத்து விளையாடுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அதே போல் தான் இந்த இம்பேக்ட் விதி இருக்கிறது என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

இதற்கு அஸ்வினும் ஸ்ரீகாந்த் மகனும் கிண்டல் அடித்தார்கள். மேலும் ஸ்ரீகாந்த் மகன், நீங்கள் பழமை வாதத்தை பேசுகிறீர்கள் என்று கூறினார். அதற்கு உடனே ஸ்ரீகாந்த் இப்போதெல்லாம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது. என்னுடைய வயது உங்களுக்கு வந்த பிறகு தான் உங்களுடைய பேரக்குழந்தைகள் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி கிண்டல் செய்வார்கள்.

அப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் பார்க்கிறேன். அப்போதுதான் வயதானவர்களின் நிலை உங்களுக்கு புரியும் என்று கூறினார். உடனே என்னை சிரித்துக் கொண்ட அஸ்வின், என்ன சார் அழைத்து வந்து சாபம் எல்லாம் விடுகிறீர்கள் என்று கூறி விவாதத்தை கூலாக மாற்ற முயற்சித்தார்.

Story first published: Thursday, August 29, 2024, 10:17 [IST]
Other articles published on Aug 29, 2024
English summary
IPL 2025 - Kris Srikanth and R Ashwin fighting each other over impact rule IMPACT பிளேயர் விதி எதுக்கு? அஸ்வினுக்கு சாபம் விட்ட ஸ்ரீகாந்த்.. யூ டியூப்பில் நடந்த காரசார விவாதம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+