Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- முதலிடத்திற்கு சென்ற ஆர்சிபி.. டெல்லியை வீழ்த்தி அபாரம்.. குர்னல், விராட் கோலி வேற லெவல்

டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் அபிஷேக் போரெல் 28 ரன்கள் எடுத்தனர். கருண் நாயர் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனை அடுத்து கே எல் ராகுல் நிதானமாக விளையாடி 39 பந்துகளில் வெறும் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் மூன்று பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் அக்சர் பட்டேல் 15 ரன்களும் அஸ்டோஸ் சர்மா இரண்டு ரன்களும் எடுக்க டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 18 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.

RCB vs DC

மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி பந்துவீச்சு தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதை அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர் சி பி அணி களம் இறங்கியது.

இதில் ஜாக்கப் போத்தேல் 12 ரன்கள் எடுக்க விராத் கோலி நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். தேவுதட் படிக்கல் டக் அவுட்டாகியும், ரஜத் பட்டிதார் ஆறு ரன்களிலும் வெளியேற rcb அணியும் தடுமாற்றத்தை கண்டது. எனினும் குர்னல் பாண்டியா இன்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தையே தலைகீழ் மாற்றினார்.

47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 73 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பௌண்டரிகளும், நான்கு சிக்சர்களும் அடங்கும். இறுதியில் டிம் டேவிட் 5 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். இதனால் ஆர் சி பி அணி 18.3 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

டெல்லி பந்துவீச்சில் அக்சர்பட்டேல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆர் சி பி அணி ஏழாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இதன் மூலம் குஜராத் அணி இரண்டாவது தடத்தையும் மும்பை அணி மூன்றாம் இடத்தையும் டெல்லி அணி நான்காவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

Story first published: Sunday, April 27, 2025, 23:36 [IST]
Other articles published on Apr 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+