Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 தொடர் தாமதமாக முடிந்தால் பெரிய பிரச்சினை காத்திருக்கு.. மீண்டும் அந்த தவறை செய்யாதீங்க

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தொடர் மீண்டும் மே 16ஆம் தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மே 25ஆம் தேதி நடைபெற இருந்த இறுதி போட்டி மே 30ஆம் தேதி நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான அட்டவணையை மாற்றி வெளியிடும் பணியை பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. எனினும் இந்த தொடருக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை மத்திய அரசு அனுமதி வழங்கி இந்த தொடர் தொடங்குவதற்கு தாமதமானால் மேலும் போட்டிகள் முடிவடைய தாமதிக்கப்படும்.

Ind vs Eng

இதனால் மிகப்பெரிய ஒரு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இந்த போட்டிகள் ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த தொடர் இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால் அதற்கு போதிய பயிற்சியை இந்திய அணி வீரர்கள் பெற வேண்டும். முன்னதாகவே இங்கிலாந்துக்கு சென்று அங்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடினால் மட்டுமே இங்கிலாந்து பவுலிங்கை எதிர்கொள்வதற்கான உத்வேகம் கிடைக்கும்.

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் இங்கு தாமதமாக முடிவடைந்தால், வீரர்கள் ஓய்வுக்கு பிறகு இங்கிலாந்துக்கு சென்றால், அந்த தொடருக்கு தயாராக நேரமே கிடைக்காது என்ற சூழல் ஏற்படும். இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி கடைசியாக தொடரை வென்றது. 2007 ஆம் ஆண்டு தான் கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி முன்னிலையில் இருந்த போது கொரோனா தொற்று காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின் நடைபெற்ற கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதனால் மீண்டும் தொடரை வெல்ல வேண்டும் என்றால் அதற்காக தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் இறங்க வேண்டும். ஆனால் ஐபிஎல் போட்டிகள் மேலும் தாமதமாக முடிந்தால் அது இங்கிலாந்து தொடருக்கு மிகப்பெரிய ஆபத்தாக இந்திய அணிக்கு அமைந்து விடும் என்று கிரிக்கெட் குழுவினர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Story first published: Sunday, May 11, 2025, 23:40 [IST]
Other articles published on May 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+