Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 10 ரன்கள் கூட அடிக்காமல் தொடரை விட்டு விலகிய 5 வீரர்கள்.. கொடுமையின் உச்சம்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் பல அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. ஸ்டார் அணிகளாக கருதப்படும் கொல்கத்தா, சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் போன்ற அணிகள் எல்லாம் பிளே ஆப் சுற்றுக்கு வராமல் வெளியேறியதே இதற்கு காரணம்.

இந்த நிலையில் மெகா ஏலத்தில் பல வீரர்கள் வேறு அணிக்கு மாறியிருந்தார்கள். ஆனால் இதில் சில வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சாதிக்கவில்லை. இந்த சூழலில் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லீச் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நடப்பு தொடரில் 10 ரன்கள் கூட பேட்டிங்கில் அடிக்காமல் வெளியேறிய வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

IPL Stats

இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா ஆல்ரவுண்டர் வியான் முல்டர். சன்ரைசர்ஸ் அணி இவரை 75 லட்சம் ரூபாய் கொடுத்து மாற்று வீரராக வாங்கியது. இதில் நடப்பு சீசனில் இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதில் 11 பந்துகளை எதிர் கொண்டு 9 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா வீரர் டோனோவின் பெரேரியா. இவருக்கு 75 லட்சம் ரூபாய் கொடுத்து டெல்லி கேப்பிடல் அணி ஏலத்தில் வாங்கியது. இவரும் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி மூன்று பந்துகளை எதிர் கொண்டு ஒரு ரன் மட்டுமே சேர்த்தார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் மும்பை இந்தியன்ஸ் வீரர் ராபின் மின்ஸ். ராபின் மின்சை 65 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி மெகா ஏலத்தில் வாங்கியது. இவர் 2 போட்டிகளில் விளையாடினார். இந்த இரண்டு போட்டிகளிலுமே தலா மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோமன் போவல். கொல்கத்தா அணியால் ஒன்றரை கோடி கொடுத்து மெகா ஏலத்தில் வாங்கப்பட்டார்.

இவர் இரண்டு போட்டிகளில் விளையாடினார். இரண்டு போட்டிகளில் மொத்தமாகவே ஐந்து ரன்கள் தான் அடித்தார். இதில் ஒரு பவுண்டரி அடங்கும். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் மோயின் அலி. கொல்கத்தா அணி இவரை இரண்டு கோடி ரூபாய் கொடுத்து மெகா ஏலத்தில் வாங்கியது. இந்த சீசனில் மொத்தமாக ஆறு போட்டிகளில் அலி விளையாடினார். இந்த ஆறு போட்டிகளில் வெறும் இரண்டு முறை தான் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு போட்டிகளில் மொத்தமாகவே அவர் ஐந்து ரன்கள் தான் அடித்து இருந்தார்.

Story first published: Thursday, May 29, 2025, 18:37 [IST]
Other articles published on May 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+