IPL 2025- சிஎஸ்கே அணிக்காக ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் யார்?
சென்னை: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும்தான். இரு அணிகளும் தலா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்றால் பேட்டிங் மட்டுமல்ல பந்துவீச்சிலும் வீரர்கள் கை கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் சிஎஸ்கே அணியில் ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணியில் 2008 ஆம் ஆண்டு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெயரை தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் ஆல்பிமார்க்கல் பெற்றார்.

2009 ஆம் ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீரர் என்ற பெயரை முரளிதரன் பெற்றார். மீண்டும் 2010 ஆம் ஆண்டு முரளிதரன் அதிக விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 2011 ஆம் ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீரர் என்ற அந்தஸ்தை அஸ்வின் பெற்றார்.
2012 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ அதிக விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீரர் என்ற பெயரை பெற்றார். இந்த சூழலில் 2013 ஆம் ஆண்டு மீண்டும் பிராவோ அதிக விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 2014 ஆம் ஆண்டு சிஎஸ்கே வீரர் மோகித் சர்மாவும், 2015 ஆம் ஆண்டு மீண்டும் பிராவோவும் சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தினார்கள். 2018 ஆம் ஆண்டு சீசனில் சர்துல் தாக்கூர் சிஎஸ்கேவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தினார்.
2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தாகிர் சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றினார். 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண், சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றினார். 2021 ஆம் ஆண்டு சர்துல் தாக்கூரும், மீண்டும் 2022 ஆம் ஆண்டு பிராவோவும் சிஎஸ்கேவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு என தொடர்ந்து இரண்டு சீசனிலும், சிஎஸ்கேவுக்காக அதிக விக்கெட் வீரர் என்ற பெயரை தேஷ் பாண்டே பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். இந்த சூழலில் நடப்பு சீசனில் அஸ்வின் அதிக விக்கெட் வீழ்த்தி அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது .


Click it and Unblock the Notifications