For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு சீசனும், அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்ச் நிற தொப்பியை வென்ற வீரர்கள் பட்டியல்

மும்பை : ஐபிஎல் தொடர் என்றாலே ரன் விருந்து ரசிகர்களுக்கு கிடைக்கும் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் பெரும்பான்மையான போட்டிகள் நடைபெறும் என்பதால் பவுலர்கள் கொஞ்சம் பாவம்தான். இந்த சூழலில் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் குவிக்கும் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு நிறத் தொப்பியை பரிசாக வழங்குவார்கள்.

இந்த ஆரஞ்சு தொப்பியை வெல்வது என்பது ஒரு கௌரவமாக ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் இருக்கும். அந்த வகையில் ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு சீசனிலும் ஆரஞ்சு நிற தொப்பியை வென்ற வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

IPL Orange cap

2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் பஞ்சாப் அணி சார்பாக விளையாடிய ஷான் மார்ஸ் 616 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வென்றார். 2009 ஆம் ஆண்டு சிஎஸ்கே சார்பாக விளையாடி ஹைடன் 572 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். 2010 ஆம் ஆண்டு மும்பை அணியின் சச்சின் டெண்டுல்கர் 618 ரன்கள் குதித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

2011 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 608 ரன்கள் குவித்து ஆர்சிபி அணி சார்பாக ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். 2012 ஆம் ஆண்டும் ஆர்சிபி அணியின் கெயில் 733 ரன்கள் குவித்து இந்த விருதை தக்க வைத்துக்கொண்டார். 2013ஆம் ஆண்டு சிஎஸ்கே வீரர் ஹஸி 733 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி சார்பாக விளையாடிய ராபின் உத்தப்பா 660 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வென்றார்.

2015 ஆம் ஆண்டு ஐதராபாத் அணி சார்பாக விளையாடிய டேவிட் வார்னர் 562 ரன்கள் எடுத்து ஆரஞ்சி தொப்பியை வென்றார்.2016 ஆம் ஆண்டு ஆர் சி பி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அதிகபட்சமாக 973 ரன்களை குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வென்றார். ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

2017 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் மீண்டும் சன்ரைசர்ஸ் அணி சார்பாக 641 ரன்கள் குவித்து ஆரஞ்சு கலர் தொப்பி வென்றார். 2018 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் சார்பில் வில்லியம்சன் 735 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை வென்றார். 2019 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் மீண்டும் சன்ரைசர்ஸ் அணி சார்பாக 692 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றினார். 2020 ஆம் ஆண்டு கே எல் ராகுல் 670 ரன்கள் குவித்து பஞ்சாப் அணி சார்பாக ஆரஞ்ச் தொப்பியை வென்றார்.

2021 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் ருதுராஜ் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக விளையாடிய ஜாஸ் பட்லர் 863 ரன்கள் குவித்து ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்றினார். 2023 ஆம் ஆண்டு குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கில் 890 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். 2024 ஆம் ஆண்டு மீண்டும் ஆர்சிபி அணியின் சார்பில் விராட் கோலி 741 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

Story first published: Friday, March 14, 2025, 14:17 [IST]
Other articles published on Mar 14, 2025
English summary
IPL 2025- List of Orange cap Winners for Most Runs in Every season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+