Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025 - மெகா ஏலத்திற்கு முன்பே 18 கோடி ரூபாய் பெற போகும் 5 வீரர்கள் யார்?

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு ஆண்டுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்பு எந்த வீரர்களை தக்க வைக்கிறோம்.

எந்த வீரர்களை விடுவிக்கின்றோம் என்பது தொடர்பான பட்டியலை பிசிசிஐ இடம் வழங்க வேண்டும்.இந்த சூழலில் அதிகபட்சமாக ஐந்து வீரர்களை தக்க வைக்கும் போது முதல் வீரருக்கு 18 கோடி ரூபாயும், இரண்டாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாயும், நான்காவது வீரருக்கு 18 கோடி ரூபாயும், ஐந்தாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும் வழங்க வேண்டும்.

ipl 2025 ipl auction 2025 ipl retention rules chennai super kings cricket

இதனால் எந்தெந்த வீரர்கள் 18 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட போகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று இருக்கிறார்.

இதனால் ஹர்திக் மீண்டும் மும்பை அணியின் கேப்டனாக தொடர்வார் என்பதால் அவரை 18 கோடி ரூபாய்க்கு மும்பை அணி தக்க வைத்துக் கொள்ளும். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க போகிறவர் சஞ்சு சாம்சன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஐபிஎல் 2021 ஆம் ஆண்டு முதல் சஞ்சு சாம்சன் வழி நடத்தி வருகிறார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி வருவதால் சஞ்சு சாம்சனுக்கே இம்முறையும் லக் அடித்து இருக்கிறது.

இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடிக்கப் போவது ரிஷப் பண்ட். டெல்லி அணியின் கேப்டனாக பண்ட் இருக்கின்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக அவர் விளையாடி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணி கேப்டனாக பண்ட் தலைமை தாங்கினார். இதனால் வரும் மெகா ஏலத்திற்கு முன்பே பண்ட் தக்க வைக்கப்பட்டு அவருக்கு 18 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். தோனிக்கு பிறகு அணியை யார் வழிநடத்த போகிறார் என்று கேள்வி எழுந்த போது கடந்த சீசனில் ருதுராஜ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங்கில் அபாரமாக விளையாடக் கூடிய ருதுராஜ்க்கு இம்முறை 18 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கப் போக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், கடந்த ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரேயாஸ்க்கு 18 கோடி ரூபாய் கிடைக்க போகிறது.

Story first published: Saturday, October 5, 2024, 10:23 [IST]
Other articles published on Oct 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+