Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எது?

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதை அடுத்து ஒரே நாளில் மூன்று அணிகள் தகுதி பெற்றிருக்கிறது. குஜராத், rcb மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் நான்காவது இடத்திற்கான போட்டி தற்போது தீவிரமடைந்திருக்கிறது. இந்த சூழலில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எது என்பதை தற்போது பார்க்கலாம்.

IPL Playoffs

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை பிளே ஆப் சென்ற அணி என்றால் அது சிஎஸ்கே நாள் இதுவரை 12 முறை சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது மும்பை அணி. மும்பை இதுவரை 10 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இந்த சீசனில் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் பதினோராவது முறையாகிவிடும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் அணியின் பெயரை கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆம் அது ஆர் சி பி. rcb அணியும் இதுவரை 10 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. நான்காவது இடத்தில் கொல்கத்தா அணி இருக்கிறது. கொல்கத்தா இதுவரை எட்டு முறை பிளே ஆப்க்கு தகுதி பெற்று இருக்கிறது.

ஐந்தாவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது. அந்த அணி ஏழுமுறை பிளே ஆப்க்கு தகுதி பெற்றிருக்கிறது. ஆறாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இருக்கிறது. ராஜஸ்தான் அணி ஆறு முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. ஏழாவது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது.

டெல்லி அணியும் ஆறு முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. எட்டாவது இடத்தில் குஜராத் அணி இருக்கிறது. குஜராத் மூன்று முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. ஒன்பதாவது இடத்தில் பஞ்சாப் அணி இருக்கிறது. அவர்களும் மூன்று முறை பிளே ஆப் தகுதி பெற்றிருக்கிறார்கள். பத்தாவது இடத்தில் லக்னோ அணி இருக்கிறது. லக்னோ இரண்டு முறை பிளே ஆப்க்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். இதில் பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிளே ஆப்க்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 19, 2025, 12:30 [IST]
Other articles published on May 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+