Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: வாழ்வா? சாவா? கட்டத்தில் லக்னோ அணி.. கோவிட் பாதிப்பால் ஹெட் நீக்கம்.. சன்ரைசர்ஸ் பவுலிங்

லக்னோ : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் 61வது லீக் ஆட்டம் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. லக்னோ அணியை பொறுத்தவரை இந்த போட்டி வாழ்வா சாவா என்ற ஆட்டமாகும்.

சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே வெளியேறிய நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கடைசி இடத்தை பிடிக்கும் அவமானம் இருக்காது. இந்த சூழலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.

LSG vs SRH

இது குறித்து பேசிய அவர், இந்த ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால் சேசிங் செய்வதே நல்லது என்று நினைக்கின்றேன். நாங்கள் எங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி இந்த சீசனில் விளையாடவில்லை. எனவே எங்கள் முழு திறனை கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றோம்.

அதுமட்டுமில்லாமல் எங்கள் அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. மற்றபடி நாங்கள் அனைவரும் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை இந்த சீசன் விளையாடவில்லை.

எங்கள் அணியில் பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் பங்கேற்கவில்லை. உனாட்கட் தனிப்பட்ட காரணத்திற்காக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அதற்கு பதிலாக ஹார்ஸ் டுபே மற்றும் டைடே ஆகியோர் களமிறங்குகிறார்கள் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய லக்னோ அணி கேப்டன், நாங்கள் முதலில் பேட்டிங் செய்வது குறித்து கவலைப்படவில்லை.

எனினும் முதல் பேட்டில் செய்யும் போது அதிக அளவு ரன்கள் குவிக்ஜ வேண்டும். நாங்கள் ஒரு கட்டத்தில் ஒரு போட்டி என்ற நிலையில் இருக்கின்றோம். பெரிய அளவில் நெருக்கடியை எங்களுக்கு நாங்கள் சுமத்தி கொள்ள விரும்பவில்லை. இந்த ஓய்வு நேரத்தில் ஒரு அணியாக நாங்கள் மீண்டும் ஒருங்கிணைந்திருக்கின்றோம். மனதளவில் நல்ல நிலையில் இருக்கின்றோம். எங்கள் அணியில் ஒரு மாற்றம்தான் வில்லியம் ரூரிக்கு ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆகிறார் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

Story first published: Monday, May 19, 2025, 19:35 [IST]
Other articles published on May 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+