Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- முதலிடம் பிடித்த குஜராத்திடம் சம்பவம் செய்த ரிஷப் பண்ட் படை.. லக்னோ அபார வெற்றி

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 64வது லீக் ஆட்டத்தில் லக்னோ, குஜராத் அணி பலப்பரீட்சை நடத்தியது. லக்னோ அணி தொடரை விட்டு ஏற்கனவே வெளியேறிய நிலையில் குஜராத் அணி முதல் இடத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் ஏய்டன் மார்க்கரம் ஆகியோர் அபாரமாக விளையாடினர்.

LSG vs GT

இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக பிரித்து மேய்ந்தனர். எய்டன் மார்க்கரம் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 24 பந்துகளில் 36 ரன்கள் எடுக்க மிட்செல் மார்ஸ் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். பவர் பிளே முடிவில் லக்னோ அணி 53 ரன்கள் கடந்த லக்னோ அணி 10 புள்ளி மூன்றாவது ஓவரில் எல்லாம் 100 ரன்களை எட்டி அசத்தியது.

ஒரு கட்டத்தில் ஏய்டன் மார்க்கரம் 36 ரன்களில் வெளியேற நிக்கோலஸ் பூரான், மிட்செல் மார்ஸ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடந்த சில போட்டிகளாக தடுமாறிய நிக்கோலஸ் பூரான் இன்று மீண்டும் அதிரடி காட்டினார்.5 சிக்சர், நான்கு பவுண்டரி என 27 பந்துகளில் அவர் 56 ரன்கள் சேர்த்தார். மிட்செல் மார்ஷ் கொஞ்சம் பொறுமை காத்தாலும் ஒரு கட்டத்தின் மேல் அதிரடி காட்டினார்.

குறிப்பாக ரஷீத் கான் வீசிய ஒரு ஓவரில் 25 ரன்கள் அவர் விளாசினார். பூரான் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஸ் 64 பந்துகளில் 117 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும்.

இதேபோன்று இறுதியில் களமிறங்கிய பந்த் 2 சிக்சர்களை விளாசி 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 20 ஓவர் முடிவில் லக்னோ இரண்டு விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருக்கிறது. குறிப்பாக ரஷீத் கான் இரண்டு ஓவர்களில் 36 ரன்களை விட்டுக் கொடுத்தார். குஜராத் பந்துவீச்சில் சாய் கிஷோர் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி வந்த சாய் சுதர்சன் , சுப்மன் கில் ஜோடி இம்முறையும் பட்டையை கிளப்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சாய் சுதர்சன் 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 46 ரன்கள் சேர்த்தது. கில் ஏழு பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார். இந்த தொடரில் தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடும் ஜாஸ் பட்லர் 18 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கும்.

இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரூதர்போர்டு 28 பந்துகளில் 38 ரன்களும், ஷாருக்கான் 29 பந்துகளின் 57 ரன்களும் சேர்த்தனர். இதில் 5 பவுண்டரி, மூன்று சிக்சர் அடங்கும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது.லக்னோ பந்துவீச்சு தரப்பில் ஆகாஷின் ஒரு விக்கெட்டையும் வில்லியம் ரூரிக்கு மூன்று விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் மற்றும் ஆயுஷ் பதோனி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

Story first published: Thursday, May 22, 2025, 23:56 [IST]
Other articles published on May 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+