IPL 2025: விக்கெட் எடுத்த உடன் எழுதுவது போல் கொண்டாடுவது ஏன்? டிக்வேஷ் உறவினர் விளக்கம்
லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பந்துவீச்சில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் லக்னோ அணிக்காக விளையாடும் டிக்வேஷ் ராணா. பாகவதர் ஸ்டைலில் முடியை வைத்திருக்கும் டிக்வேஷ் ரதி. பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்.
இந்த நிலையில் விக்கெட் எடுத்தவுடன் புத்தகத்தில் எழுதுவது போல் ஒவ்வொரு முறையும் கொண்டாடி வருகிறார். முதலில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடும் போது பிராய்ன்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் அவரிடம் சென்று கையில் எழுதி கொண்டாடினார்.

இதற்கு பிசிசிஐ போட்டியின் ஊதியத்திலிருந்து 25% அபராதம் விதித்தது. அதன் பிறகு மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நமன் தீர்க்கு எதிராக இதேபோல் டிக்வேஷ் ரதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து, அவருக்கு போட்டியின் ஊதியத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
எனினும் டிக்வேஷ் ரதி அந்த கொண்டாட்டத்தை விடுவது போல் இல்லை.கொல்கத்தா அணிக்கு எதிராக சுனில் நரேன் ஆட்டம் இழந்தவுடன் தரையில் எழுதி கையெழுத்து போடுவது போல் கொண்டாடினார். எனும் அதற்கு பிசிசிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து டிக்வேஷ் சகோதரர் சுனிக் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.
நான் ஏன் இவ்வாறு விக்கெட் எடுத்தவுடன் கொண்டாடுகிறாய் என்று டிக்வேஷ் இடம் கேட்டேன். அதற்கு இவ்வாறு செய்வது எனக்கு புதிய உத்வேகத்தை தருகிறது. இதன் மூலம் நான் சிறப்பாக பந்து வீச முடிகிறது என்று கூறினார். உடனே நான் அது உனக்கு பயன்பட்டது என்றால் தாராளமாக செய். ஆனால் எதிரணி வீரர்களுக்கு மரியாதை குறைவை ஏற்படுத்தும் வகையில் நடக்காதே என்று கூறினேன்.
பலரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக டிக்வேஷ் இவ்வாறு செய்கிறார் என்று கூறுகிறார்கள். அது தவறு. இதற்கு முன்பு வரை அவர் சமூக வலைத்தளத்தில் கூட ஒரு கணக்கை தொடங்கவில்லை. அனைவரும் whatsapp-இல் ஸ்டேட்டஸ் வைப்போம். ஆனால் அவர் வைத்ததே கிடையாது. எதற்கு என்று கேட்டால் எனக்கே ஒரு ஸ்டேட்டஸ் இல்லாத போது நான் ஸ்டேட்டஸ் வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று அவர் கூறுவார் என டிக்வேஷின் சகோதரர் சுனில் தெரிவித்துள்ளார்.
லக்னோ அணி வெறும் 30 லட்சம் ரூபாய்க்கு தான் டிக்வேஷ் ரதியை ஏலத்தில் எடுத்தது. தற்போது அவர் 7 போட்டியில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அவருடைய சராசரி வெறும் ஏழு என்ற அளவிலே இருக்கின்றது.


Click it and Unblock the Notifications