IPL 2025: தொடரை விட்டு வெளியேறிய லக்னோ.. அபிஷேக் அதிரடியால் சன்ரைசர்ஸ் வெற்றி
லக்னோ: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் மூலம், லக்னோ அணி தொடரை விட்டு வெளியேறியது. லக்னோ வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஸ் மற்றும் ஏய்டன் மார்க்கரம் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் வீரர்கள் தடுமாறினர். பவர் பிளே முடிவில் இந்த ஜோடி 69 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து அதிரடி காட்டிய மிட்செல் மார்ஸ் 28 பந்துகளில் அரை சதம் அடிக்க எய்டன் மார்க்கரம் 28 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு விளையாடினர். மிட்செல் மார்ஸ் 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார்.
இதில் நான்கு பவுண்டரிளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்களை 10 புள்ளி மூன்று ஓவர்களில் எல்லாம் சேர்த்தது. இந்த சூழலில் நிக்கோலஸ் பூரான் களத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பந்த் களத்திற்கு வந்து பேட்டிங் செய்ய வந்தார். இந்த சீசன் முழுவதும் கடுமையாக தடுமாறி வந்த ரிஷப் பண்ட் இன்றைய ஆட்டத்திலும் சொதப்பினார்.
6 பந்துகளை எதிர் கொண்ட அவர் வெறும் 7 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி அடங்கும். அதற்குள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
27 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட ரிஷப் பன்ட் தடுமாறி வருவது அவரது ரசிகர்களையும் லக்னோ அணியின் உரிமையாளரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுபோன்று நடுவரசை வீரர் நிக்கோலஸ் பூரான் அபாரமாக விளையாடி 26 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசஸ் பந்துவீச்சு தரப்பில் இஷான் மலிங்கா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக அதர்வா தைடே மற்றும் அபிஷேக் ஷர்மா களம் இறங்கினார்.அதர்வா தாய்டே மூன்று பவுண்டரிகளை விளாசி 9 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார் மறுபுறம் அபிஷேக் ஷர்மா தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
லக்னோ அணி பவுலர்களின் பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்த அவர் ரிஷப் பண்ட்க்கு வில்லனாக மாறினார். சிக்ஸர், பௌண்டரி என பறக்கவிட்ட அவர் 18 பந்துகளில் அரை சதம் விளாசினார். குறிப்பாக ரவி பிஸ்னாய் ஓவரை எதிர்கொண்ட அவர் தொடர்ந்து நான்கு சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார்.இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 7.4 ஓவர்கள் எல்லாம் 100 ரன்களை கடந்து வலுவான நிலையில் இருந்தது. 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் 59 ரன்கள் சேர்த்தார்.
இசான் கிஷன் 35 ரன்களும், ஹென்றிச் கிளாசன் 47 ரன்களும், கமின்டு மெண்டிஸ் 32 ரன்களும் எடுக்க 18.2 ஓவரில் எல்லாம் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் லக்னோ அணி பிளே ஆப்க்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.


Click it and Unblock the Notifications