IPL 2025: 64 பந்தில் 117 ரன்கள்..8 சிக்சர், 10 பவுண்டரி.. மிட்செல் மார்ஷ் அபாரம்..லக்னோ இமாலய இலக்கு
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 64வது லீக் ஆட்டத்தில் லக்னோ, குஜராத் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. லக்னோ அணி தொடரை விட்டு ஏற்கனவே வெளியேறிய நிலையில் குஜராத் அணி முதல் இடத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் ஏய்டன் மார்க்கரம் ஆகியோர் அபாரமாக விளையாடினர்.

இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக பிரித்து மேய்ந்தனர். எய்டன் மார்க்கரம் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 24 பந்துகளில் 36 ரன்கள் எடுக்க மிட்செல் மார்ஸ் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். பவர் பிளே முடிவில் லக்னோ அணி 53 ரன்கள் கடந்த லக்னோ அணி 10 புள்ளி மூன்றாவது ஓவரில் எல்லாம் 100 ரன்களை எட்டி அசத்தியது.
ஒரு கட்டத்தில் ஏய்டன் மார்க்கரம் 36 ரன்களில் வெளியேற நிக்கோலஸ் பூரான், மிட்செல் மார்ஸ் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடந்த சில போட்டிகளாக தடுமாறிய நிக்கோலஸ் பூரான் இன்று மீண்டும் அதிரடி காட்டினார்.5 சிக்சர், நான்கு பவுண்டரி என 27 பந்துகளில் அவர் 56 ரன்கள் சேர்த்தார். மிட்செல் மார்ஷ் கொஞ்சம் பொறுமை காத்தாலும் ஒரு கட்டத்தின் மேல் அதிரடி காட்டினார்.
குறிப்பாக ரஷீத் கான் வீசிய ஒரு ஓவரில் 25 ரன்கள் அவர் விளாசினார். பூரான் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஸ் 64 பந்துகளில் 117 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும்.
இதேபோன்று இறுதியில் களமிறங்கிய பந்த் 2 சிக்சர்களை விளாசி 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 20 ஓவர் முடிவில் லக்னோ இரண்டு விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்திருக்கிறது. குறிப்பாக ரஷீத் கான் இரண்டு ஓவர்களில் 36 ரன்களை விட்டுக் கொடுத்தார். குஜராத் பந்துவீச்சில் சாய் கிஷோர் மற்றும் அர்ஷத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications