Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: என் மேல் ஏதும் கோபம் இல்லையே? ராகுலை முதுகில் தட்டி வாழ்த்திய லக்னோ உரிமையாளர் கோயங்கா

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி தங்களது ஆறாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

லக்னோ அணியை பொறுத்தவரை இது அவர்களுக்கு நான்காவது தோல்வியாகும். ஒன்பது போட்டிகளில் விளையாடி 5 வெற்றியை பெற்று 10 புள்ளிகள் உடன் லக்னோ அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

LSG vs DC

இந்த சூழ்நிலையில் ராகுலுக்கும் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நாம் அனைவருக்கும் தெரியும். லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் இருந்தபோது அவர் சரியாக செயல்படவில்லை என அனைவரும் முன்பும் சஞ்சீவ் கோயங்கா திட்டி அவமானப்படுத்தினார்.

இதனால் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் ராகுல் அணியை விட்டு விலகினார். ஏலம் நடைபெற்ற போது லக்னோ அணி ரிஷப் பந்தை வாங்கியது. அப்போது பேசிய கோயங்கா, அணிக்கு வெற்றியை தேடி தரும் திறமை உடைய வீரரை தான் நாங்கள் வாங்க விரும்பினோம். அதனால் தான் பண்டை வாங்கினோம் என்று கூறினார்.

இது ராகுலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடப்பு தொடரில் ராகுல் அபாரமாக விளையாடி வருகிறார். லக்னோ அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ராகுல் தனி ஆளாக நின்று 52 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டெல்லி அணி 17.5 ஓவரில் வெற்றி பெற்றது. ராகுல் தனது ஜெர்சிய இருக்கும் பெயரை காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் போட்டி முடிவடைந்த பிறகு ராகுலை சந்தித்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ராகுலை முதுகில் தட்டி பாராட்டி ஏதோ சொன்னார் அதற்கு ராகுலும் சிரித்துக்கொண்டு சென்றார். இதன் மூலம் ராகுல் தமது திறமையை நிரூபித்து சஞ்சீவ் கோயங்காவுக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சஞ்சீவ் கோயங்கா ராகுலை வாழ்த்தியது நல்ல விஷயம் என்றும் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் பண்டை தேர்வு செய்து கோயங்கா தவறு செய்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, April 22, 2025, 23:45 [IST]
Other articles published on Apr 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+