Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 2 முறை அவுட்டாகியும் தப்பித்த லக்னோ வீரர்.. 3வது முறை கடுப்பாகி ஜடேஜா செய்த காரியம்

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று லக்னோவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி வீரர்களை விரைவாக ஆட்டமிழக்க வைக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் சிஎஸ்கே வீரர்கள் செயல்பட்டனர். கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே வீரர்கள் பில்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்ட நிலையில் இன்று நல்ல முன்னேற்றம் இருந்தது.

Ayush Badoni

இந்த நிலையில் லக்னோ அணியின் மிகவும் முக்கியமான வீரராக பதோனி விளங்கினார். லக்னோ அணி 73 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறினார். இந்த நிலையில் களத்திற்கு வந்த பதோனி , பண்ட் உடன் இணைந்து ஜோடி சேர்ந்து விளையாடினார். அவருடைய விக்கெட்டை விரைவில் எடுக்க சிஎஸ்கே வீரர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

பதோனி விக்கெட்டை வீழ்த்துவதற்காக சிஎஸ்கே சிறப்பு திட்டம் ஒன்று தீட்டியிருந்தது. அதன்படி ஆப்சைடில் ஷார்ட் பாலாக பதிரானா வீச அதை பதோனி அடிக்க முற்பட்டபோது விஜய் சங்கரிடம் தெர்த்மேன் திசையில் கேட்ச் ஆனார். இந்த சூழ்நிலையில் இந்த பந்து ஷார்ட்பாலாக இருக்கலாம் என பதோனி டி ஆர் எஸ் முடிவை கேட்டார். அப்போது இது வீரரின் தோள்பட்டைக்கு மேல் சென்றது எனக் கூறி நடுவர்கள் இதற்கு நோபால் வழங்கினார்.

இதனை அடுத்து மீண்டும் ஜடேஜா பந்துவீச்சில் ஆயுஸ் பதோனி எல்பி டபிள்யூ ஆனார். இதற்கு கள நடுவர் அவுட் கொடுக்க, இதற்கு மீண்டும் டிஆர்எஸ் முடிவு கேட்கப்பட்டது. அப்போது பந்து காலில் படுவதற்கு முன்பு கையில் பட்டது தெரிய வந்தது. இதற்கும் மூன்றாம் நடுவர்கள் அவுட் தர மறுத்து விட்டார்கள். இதனால் ஜடேஜா கடுப்பானார்.

இந்த சூழ்நிலையில் ஜடேஜா பந்தை ஓயிடாக வீச அதை இறங்கி அடிக்க வந்த போது தோனி அவரை ஸ்டம்பிங் செய்தார்.உடனே அதையும் மூன்றாம் நடுவர்கள் தோனி ஸ்டெம்பிங் முன்பே பந்தை பிடித்து விட்டாரா என்று பார்த்தனர். ஆனால் தோனி விதிப்படிதான் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார் என்று நடுவர் அறிவித்தனர். இதனை அடுத்து நடுவர் தனது தொப்பியில் பொருத்தி இருந்த கேமராவுக்கு முன் சென்று ஜடேஜா கொண்டாடி வெறுப்பேற்றினார்.

Story first published: Monday, April 14, 2025, 21:20 [IST]
Other articles published on Apr 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+