IPL 2025- கடைசி 5 ஓவரில் 57 ரன்கள் 5 விக்கெட்.. சவாலான இலக்கை தொட்ட லக்னோ.. ஹர்திக் அசத்தல் பவுலிங்
லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் இரண்டு ரன்கள் ஆட்டம் இருந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்றால் அது ரிஷப் பண்ட் தான்.
நடப்பு மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்கா வாங்கினார். அதிரடியாக ஆடக்கூடிய பண்ட்,பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பண்ட், மிகவும் மோசமான ஒரு இன்னிங்ஸை ஆடி வருகிறார்.

டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் கீப்பரான பண்ட் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 15 ரன்கள் மட்டும் தான் அடித்தார்.இந்த சூழலில் பஞ்சாப் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இரண்டு ரன்களில் பண்ட் ஆட்டமிழந்தார். இதனால் பண்ட் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பன்ட் பட்டையை கிளப்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பண்டின் பேட்டிங்கே மறந்து விட்டது போல் அவர் விளையாடினார்.
6 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே சேர்த்து ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதனால் 4 போட்டிகளில் விளையாடுகிற பண்ட் மொத்தமாகவே 19 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதனால் ரிஷப் பண்டை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். ரிஷப் பண்ட், லக்னோ அணி உரிமையாளர் கோயங்காவை ஏமாற்றுவதாகவும் பண்ட்க்கு பேட்டிங்கே மறந்துவிட்டது என்றும் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
பந்த் ஓய்வு எடுத்துக் கொண்டு நன்றாக பயிற்சி செய்து விட்டு பின்னர் களத்துக்கு திரும்ப வேண்டும் என்றும் சில ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சிலர் இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட் ஓரங்கட்டப்பட்டதிலிருந்து அவருடைய உத்வேகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் தான் அவர் சரியாக விளையாடவில்லை என்றும் கூறுகின்றனர். இதற்கு கம்பீர் தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications