லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. லக்னோ வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஸ் மற்றும் ஏய்டன் மார்க்கரம் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் வீரர்கள் தடுமாறினர். பவர் பிளே முடிவில் இந்த ஜோடி 69 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து அதிரடி காட்டிய மிட்செல் மார்ஸ் 28 பந்துகளில் அரை சதம் அடிக்க எய்டன் மார்க்கரம் 28 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு விளையாடினர். மிட்செல் மார்ஸ் 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார்.
இதில் நான்கு பவுண்டரிளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்களை 10 புள்ளி மூன்று ஓவர்களில் எல்லாம் சேர்த்தது. இந்த சூழலில் நிக்கோலஸ் பூரான் களத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பந்த் களத்திற்கு வந்து பேட்டிங் செய்ய வந்தார். இந்த சீசன் முழுவதும் கடுமையாக தடுமாறி வந்த ரிஷப் பண்ட் இன்றைய ஆட்டத்திலும் சொதப்பினார்.
6 பந்துகளை எதிர் கொண்ட அவர் வெறும் 7 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி அடங்கும். அதற்குள் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
27 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட ரிஷப் பன்ட் தடுமாறி வருவது அவரது ரசிகர்களையும் லக்னோ அணியின் உரிமையாளரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுபோன்று நடுவரசை வீரர் நிக்கோலஸ் பூரான் அபாரமாக விளையாடி 26 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசஸ் பந்துவீச்சு தரப்பில் இஷான் மலிங்கா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.