Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL: தெறிக்கவிட்ட மார்ஷ், பூரான்.. பேட்டிங் செய்ய வராமல் ஒளிந்து கொண்ட பண்ட்.. KKR-க்கு இமாலய இலக்கு

கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணி கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 238 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி தொடக்க வீரர்கள் ஏய்டன் மார்க்கரம், மிட்செல் மார்ஸ் ஆகியோர் ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக விளையாடினர். மைதானத்தில் ஒரு பவுண்டரி அளவு வெறும் 58 மீட்டர் தூரம் தான் இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு பேட்ஸ்மேன்கள் இன்று கதகளி ஆடினார்கள்.

Nicholas Pooran

தொடக்க வீரரான எய்டன் மார்க்கரம் 28 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ் தன் பங்கிற்கு பட்டையை கிளப்பினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கொல்கத்தா வீரர்கள் தடுமாறினர். 36 பந்துகளில் மிட்செல் மார்ஸ் அரை சதம் அடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ரன்களை சேர்த்தது. ஏய்டன் மார்க்கரம் 42 ரன்களில் வெளியேற மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகிய ஜோடி சேர்ந்து கொல்கத்தாவின் பந்துவீச்சை சின்னாபின்னம் ஆக்கினர். மிட்செல் மார்ஸ் 48 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர்களும், ஆறு பவுண்டரிகளும் அடங்கும்.

மிட்செல் மார்ஸ் ஆட்டமிழந்தவுடன் ரிஷப் பந்த் களத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பன்ட் கடந்த சில போட்டிகளாக தடுமாறி வருவதால், அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. இதன் காரணமாக அப்துல் சமத் வந்தார். எனினும் கொல்கத்தா வீசிய பெரும்பான்மையான பந்துகளை அதன் பிறகு நிக்ரோஸ் பூரான் எதிர்கொண்டார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 36 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டர்களும், எட்டு சிக்ஸர்களும் அடங்கும். பூரான் ஸ்ட்ரைக் ரேட் 241 என்று அளவில் இருந்தது. அப்துல் சமத் ஆறு ரன்னில் ஆட்டம் இழந்த பிறகும், ரிஷப் பன்ட் மீண்டும் களத்துக்கு வராமல் டேவிட் மில்லரை அனுப்பினார். அவர் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்திருக்கிறது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சு தரப்பில் ஹர்சித் ரானா 51 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி 31 மட்டுமே விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

Story first published: Tuesday, April 8, 2025, 17:30 [IST]
Other articles published on Apr 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+