Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: வெற்றிக்கு 1 ரன் இருக்கும் போது, எதுக்கு Strategy time.. LSG-யை கிண்டல் செய்யும் ரசிகர்கள்

மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் லக்னோ அணிகள் மோதிய ஆட்டத்தில் ஒரு காமெடி சம்பவம் நடைபெற்றிருக்கிறது. லக்னோவில் நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171-ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் பஞ்சாப் அணியில் பிராப்சிம்ரன்சிங் மற்றும் ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாட சதம் அடிக்க அந்த அணி 16.2 ஓவரில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

LSG vs PBKS

இந்த சூழலில் ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங் செய்யும் அணி யுக்திகளை வகுப்பதற்காக 2.30 நிமிடமும் பந்துவீசும் அணி யுக்திகளை வகுப்பதற்காக 2.30 நிமிடமும் ஒரு இன்னிங்ஸில் நேரம் வழங்கப்படும். பொதுவாக இந்த விதியால் போட்டியின் வேகம் தடைபடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் இந்த ஸ்டேட்டஜிக் டைம் எடுக்கும் போது வீரர்களின் கவனம் சிதறுவதாகவும், இதனால் மீண்டும் இன்னிங்ஸ் தொடங்கும் போது பேட்ஸ்மேன்கள் உடனே ஆட்டமிழக்க நேர்வதாகவும் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலத்திலிருந்து அவர் குற்றம் சாட்டி வந்தார். ஆனால் பிசிசிஐ இந்த விதியை மாற்றவில்லை. இந்த தருணத்தில் நேற்று லக்னோ அணி பந்து வீசிக்கொண்டிருந்த போது 16வது ஓவர் முடிவில் ஸ்டேடஜிக் டைம் அவுட்டை எடுத்துக் கொண்டது.

அப்போது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தான் தேவைப்பட்டது. இதைத்தான் தற்போது ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 1 ரன் இருக்கும்போது எதற்காக எல் எஸ் ஜி அணி இந்த டைம் அவுட்டை எடுத்தது. ஒரு ரன் இருக்கும் போது அப்படி என்ன யுக்திகளை நீங்கள் வகுக்க போகிறீர்கள் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்த வருகின்றனர். மேலும் இதனை கொஞ்சம் முன்கூட்டியே எடுத்திருந்தால் பஞ்சாப் அணியின் ரன் குவிப்பு வேகம் தடை பட்டிருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இந்த டைம் அவுட் என்பது விளம்பரத்திற்காக உருவாக்கப்பட்ட பிசிசியின் திட்டம் என்றும், இதற்கும் கிரிக்கெட்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற விமர்சனமும் இருந்துள்ளது. அதிகப்படியான விளம்பரங்களை போட்டு சம்பாதிப்பதற்காக தான் இந்த நேரம் ஒதுக்கப்படுவதாகவும் இதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இப்படி ஒரு ரன் இருக்கும்போது இந்த டைம் அவுட்டை எடுப்பது கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கும் விஷயம் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, April 2, 2025, 13:41 [IST]
Other articles published on Apr 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+