Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

LSG vs DC:இவர் இன்னும் திருந்தல மாமா!ராகுலுக்கு கொடுத்த அதே டிரிட்மண்ட்..கோயங்காவிடம் சிக்கிய பண்ட்

விசாகப்பட்டினம்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டார். இதற்கு முன்பு அந்த அணியின் கேப்டனாக இருந்த கே எல் ராகுலுக்கும், அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் இதே போல் தான் லக்னோ அணி தோற்றதால் கடுப்பான அந்த அணியின் உரிமையாளர் கோயங்கா அனைவர் முன்பும் கேஎல் ராகுலிடம் கடும் கோபமாக நடந்து கொண்டார். இந்த சூழ்நிலையில் தான் ராகுல் அணியை விட்டு விலகினார்.

sanjiv goenka vs pant

இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை 27 கோடி ரூபாய் கொடுத்து கோயங்கா வாங்கினார். மேலும் வெற்றிக்காக விளையாடும் கேப்டனை தாங்கள் பெற்றிருப்பதாக ராகுலை தாக்கும் விதமாக கோயங்கா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடப்பு சீசனில் லக்னோ அணி தங்களுடைய முதல் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டு விளையாடியது.

இதில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சொதப்பி 6 பந்துகளில் டக்அவுட் ஆனார். எனினும் மற்ற வீரர்கள் அபாரமாக விளையாடியதால் லக்னோ அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இந்த சூழலில் டெல்லி அணி பேட்டிங் செய்யும்போது 65 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் ஆசுதோஷ் சர்மா மற்றும் விப்ராஜ் நீகம் ஆகியோர் அபாரமாக விளையாடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த போட்டியில் ரிஷப் பண்ட் பல தவறுகளை செய்தார். கடைசி இரண்டு ஓவருக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அனுபவ வீரர்களுக்கு பந்தை கொடுக்காமல் இளம் வீரர் பிரின்ஸ் யாதவிடம் பண்ட் ஓவரை வழங்கினார். இதனால் 19 ஓவரில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என மொத்தம் 16 ரன்கள் சென்றது. இதன் மூலம் கடைசி மூவருக்கு வெறும் ஆறு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கடைசி ஓவரையும் அவர் சபாஷ் அஹமது வீச அழைத்தார். இதனால் லக்னோ அணி வெற்றி பெற்றது. போட்டி முடிவடைந்த பிறகு ராகுலை எவ்வாறு அழைத்து பேசினாரோ அதேபோல் சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்டையும், பயிற்சியாளர் லாங்கரையும் அனைவரும் முன்பும் அழைத்து பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இதை சுட்டிக்காட்டி கோயங்கா இன்னும் திருந்தவில்லை என்றும் அனைவரும் முன்பும் அழைத்து இவ்வாறு பேசுவது கேப்டனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் சாடி உள்ளனர்.

Take a Poll
Story first published: Tuesday, March 25, 2025, 10:34 [IST]
Other articles published on Mar 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+