Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

LSG vs PBKS: ஓவர் திமிர் தம்பி உங்களுக்கு.. பேட்ஸ்மேனை அவுட்டாக்கி அநாகரீகமாக நடந்த டிக்வேஸ் ரதி

லக்னோ: ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கும். பல வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு விளையாடி இருக்கிறார்கள். ஆனால் சில வீரர்கள் அதிக அளவு பெயர் புகழ் வருவதால் அதனை எப்படி சரியாக கையாள்வது என தெரியாமல் போயிருக்கிறார்கள்.

இன்னும் சிலர் எதையும் சாதிக்காத நிலையில் கூட பெரிய அளவில் தங்களது திமிர் தனத்தை வெளிக்காட்டி ரசிகர்களிடம் மிதி வாங்குவார்கள். அப்படி தான் இன்று பஞ்சாப், லக்னோ அணிகளுக்கு இடையிலான மோதிய ஆட்டத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

Digvesh Rathi

முதலில் டாஸ் வென்று பந்து வீசிய பஞ்சாப் அணி லக்னோ அணியை 171 ரன்களில் சுருட்டியது. இதில் லக்னோ அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 44 ரன்கள் எடுத்தார். இந்த இலக்கை பஞ்சாப் அணி எளிதில் எட்டியது. முதல் இரண்டு புள்ளி ஐந்து ஓவரில் பஞ்சாப் அணி 26 ரன்கள் எடுத்தது. அப்போது லக்னோ அணியின் பவுலர் ரதி தன்னுடைய பந்து வீச்சு மூலம் பிரியான்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த விக்கெட்டை மற்ற வீரர்களுடன் டிக்விஸ் ரதி கொண்டாடிய போது திடீரென்று பிரியான்ஸ் ஆர்யாவை நோக்கி ஓடினார். பின் அவரிடம் கையில் புத்தகத்தில் அவருடைய பெயரை எழுதுவது போல் கிறுக்கி சைகையில் அவரிடம் வம்பு இழுத்தார். எனினும் இதனை கண்டு கொள்ளாமல் பிராயன்ஸ் ஆர்யா சென்று விட்டார். இது ஒட்டுமொத்த பஞ்சாப் அணி ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது.

முதலில் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த பஞ்சாப் அணி அந்த சம்பவத்திற்கு பின் அதிரடி காட்டுகிறது. மற்றொரு தொடக்க வீரரான பிராப்சிம்ரன் சிங் 9 பவுண்டரி மூன்று சிக்சர் என லக்னோ பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தார். டிக்வீஸ் திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் அவருடைய இந்த கொண்டாட்டம் என்பது முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மரியாதையுடன் நடந்து கொள்ளும் அணிக்கு பவர் ப்ளே விருது கிடைக்கும். ஆனால் தற்போது லக்னோ வீரர் செய்த இந்த காரியம் அந்த அணையின் புள்ளிகளை கடுமையாக பாதிக்கும் வகையில் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, April 2, 2025, 7:00 [IST]
Other articles published on Apr 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+