Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ் 50 அடிக்க, டாட் பால் ஆடிய வதேரா..என்னிடம் ஒரு பேட் தான் இருந்தது..இன்று ஆடுவேன் என தெரியாது

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியின் கேப்டனாக சுயநலம் இன்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே பஞ்சாப் அணியின் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்கும் வாய்ப்பை தியாகம் செய்தார்.

இதன் மூலம் எதிரே இருந்த வீரர் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி 22 ரன்கள் குவிக்க அதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் இருந்தது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் 46 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

Nehal Wadhera

எதிரே விளையாடி வந்த வதேரா 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது கேப்டன் வின்னிங் சாட் ஆட வேண்டும் என்பதற்காக 16 வது ஓவரின் கடைசி பந்தை டாட் பாலாக மாற்றினார். இதை அடுத்து அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் விளாசி தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வதேராவிடம், ஸ்ரேயாஸ் அரை சதம் அடிப்பதற்காக ஸ்கோர் சமனில் இருந்தபோது டாட் பால் விளையாடினீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர் கண்டிப்பாக இல்லை. எங்களுடைய திட்டம் அது கிடையாது என்று சொல்லி சிரித்தார். மேலும் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடியதாகவும் அவருடைய சிறப்பான கேப்டன்சி ஆல் தான் நாங்கள் வெற்றி பெறுவதாகவும் வதேரா கூறினார்.

மேலும் வெற்றி குறித்து பேசிய அவர், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஸ்ரேயாஸ் மற்றும் அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். குறிப்பாக பந்துவீச்சு படை என்ற அபாரமாக செயல்பட்டது. பிராப்சிம்ரன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடுவது குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை.முதலில் இன்றைய ஆட்டத்தில் நான் விளையாடுகிறேனா என்று எனக்கு தெரியவில்லை. என்னிடம் ஒரே ஒரு பேட் மட்டும் தான் இருந்தது. அதன் பிறகு தான் இன்று நான் விளையாடுகிறேன் என்று அணி நிர்வாகம் கூறியது. நான் பேட்டிங் செய்ய சென்றபோது என்னுடைய ஷாட்களை நான் ஆட விரும்பினேன்.

எந்த மாதிரி சாட் ஆடப் போகிறேன் என்று எனக்கு முன்பே தெரியும். ஸ்ரேயாஸ் என்னுடைய நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பேசினார். அனைத்து பாராட்டுக்களும் எங்களுடைய கேப்டனுக்கே சேர வேண்டும். என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட சொல்லி முழு சுதந்திரம் அளித்தார். ரிக்கி பாண்டிங் உண்மையிலே ஒரு சிறந்த பயிற்சியாளர். அவர் பேசும்போது அவரிடம் இருந்து எந்த ஒரு நெகட்டிவ் பேச்சும் வராது. எப்போதுமே எங்களுடைய நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் தான் பேசுவார் என்று வதேரா கூறினார்.

Story first published: Wednesday, April 2, 2025, 0:01 [IST]
Other articles published on Apr 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+