Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

LSG vs SRH: 269 ஸ்ட்ரைக் ரேட்.. 6 சிக்சர்கள்.. சன்ரைசர்ஸ் அணியை கதறவிட்ட லக்னோ வீரர் பூரான்

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் அணி நிர்ணயித்த 191 ரன்கள் என்ற இலக்கை 16.1 ஓவரிலே எட்டி லக்னோ அணி அசத்தி இருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா ஆறு ரன்களிலும், இசான் கிஷன் டக் அவுட் ஆகியும் வெளியேற டிராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று ஹென்றிச் கிளாசன் 26 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 32 ரன்களிலும் ஆட்டம் இழக்க, இறுதியில் அன்கிட் வர்மா 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

LSG vs SRH

கேப்டன் கம்மின்ஸ் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி 18 ரன்களில் ஆட்டம் இழந்தார்.இதன் மூலம் 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய சர்துல் தாக்கூர் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்கவீரர் மார்க்கரம் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஸ், நிக்கோலஸ் பூரான் ஆகியோர் அதிரடி காட்டினர்.இம்பேக்ட் வீரராக களமிறங்கிய மார்ஷ் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ஒருபுறம் மற்ற வீரர்கள் தடுமாறினாலும் நிக்கோலஸ் பூரான் தனி ஆளாக நின்று சன்ரைசஸ் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தார். நிக்கோலஸ் புராணில் அதிரடியை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் வீரர்கள் தடுமாறினர்.

பூரான் பேட்டிங்கை பார்த்து காவியா மாறனே சோகமாக மாறிவிட்டார். 18 பந்துகளில் அரை சதம் விளாசிய பூரான் தொடர்ந்து அதிரடி காட்டி 26 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார்.இதில் ஆறு பவுண்டரி, 6 சிக்சர் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 269 என்ற அளவில் இருக்கிறது. இறுதியில் அப்துல் சமத் எட்டு பந்துகளில் 22 ரன்களும், டேவிட் மில்லர் 7 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க லக்னோ அணி 16.1 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளையும், ஆடம் சாம்பா, ஹர்சல் பட்டேல் மற்றும் சமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி முதல் தோல்வியையும் லக்னோ அணி முதல் வெற்றியையும் பெற்றிருக்கிறது.

Story first published: Thursday, March 27, 2025, 23:31 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+