Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

LSG vs SRH: யாருப்பா இந்த குட்டி ஸ்ரீநாத்.. சன்ரைசர்ஸ் பேட்டிங்கை சிதைத்த பிரின்ஸ் யாதவ்

ஐதராபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் எஸ் ஆர் எச் அணியும் லக்னோ அணியும் பல பரிட்சை நடத்தியது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்கள் போல் அமைந்திருக்கும் பேட்டிங் வரிசையில் உடன் களமிறங்கும் சன்ரைசனி மீண்டும் 250 ரன்கள் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் லக்னோ அணியில் இடம் பிடித்து இருந்த பிரின்ஸ் யாதவ் என்ற வீரர் சன்ரைசஸ்க்கு கடும் அதிர்ச்சி அளித்தார். பும்ரா, ஜாகீர் கான் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முன்பு இந்திய அணியில் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது ஜவகல் ஸ்ரீநாத் தான்.

Prince Yadav bowling

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளரான ஜவகல் ஸ்ரீநாத் இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 315 விக்கெட்டுகளும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 236 விக்கெட்டு களையும் வீழ்த்தி நம்பர் ஒன் வீரராக இருந்தவர்.

ஸ்ரீநாத்தின் பந்துவீச்சு ஸ்டைல் 90ஸ் கிட்ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் விருப்பமானவை. இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் பிரின்ஸ் யாதவ் கிட்டத்தட்ட ஸ்ரீநாத்தின் பந்துவீச்சு ஸ்டைலை நினைவுபடுத்தும் விதமாக செயல்படுகிறார். ஸ்ரீநாத் போலவே அதிவேகமாக பந்து வீசி வரும் பிரின்ஸ் யாதவ் சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார்.

வழக்கம் போல் மூன்று சிக்ஸர், 5 பவுண்டரி என 28 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இந்த சூழலில் பிரின்ஸ் யாதவ் தன்னுடைய அபார பந்துவீச்சு மூலம் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை கிளீன் போல்ட் ஆக்கினார். பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சை அடிக்க முடியாமல் மற்ற சன்ரைசர்ஸ் வீரர்களும் தடுமாறினர்.

நான்கு ஓவர்கள் வீசிய பிரின்ஸ் யாதவ் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே சென்றது. எனினும் அவர் நான்கு ஓயிடு பால்களை வீசினார். பிரின்ஸ் யாதவுக்கு தற்போது 23 வயது தான் ஆகிறது.இதுதான் அவருக்கு இரண்டாவது ஐபிஎல் போட்டி ஆகும். தொடர்ந்து இதுபோல் அவர் நிறைய ஐபிஎல் போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ அணியின் மென்டராக ஜாகீர் கான் உள்ள நிலையில் அவர் பிரின்ஸ் யாதவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

Story first published: Thursday, March 27, 2025, 21:21 [IST]
Other articles published on Mar 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+