Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- லக்கோ அணியிலிருந்து ராகுல் வெளியேறுவது உறுதி.. தக்க வைக்கப்படும் வீரர்கள் யார்?

லக்னோ : புயலாய் வந்து.. புஸ்வானமாக மாறி இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் தற்போது பல அதிரடி மாற்றங்கள் நிகழப் போகின்றது. ஐபிஎல் வரலாற்றிலே அதிக தொகை கொடுத்து ஒரு அணியை வாங்கி இருக்கிறார்கள் என்றால் அது லக்னோ தான்.

கிட்டத்தட்ட 2021 ஆம் ஆண்டு இறுதியில் 7090 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணியை கோயங்கா குடும்பம் வாங்கியது. அது மட்டுமல்லாமல் கேல் ராகுலை தான் தங்கள் அணியின் கேப்டனாக 17 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணி நியமித்தது. லக்னோ உடன் குஜராத் அணி களமிறங்கிய முதல் சீசனிலே சாம்பியன் பட்டத்தையும் இரண்டாவது சீசனில் பைனல் வரையும் வந்து அசத்தியது.

ipl 2025 kl rahul lsg 2025

ஆனால் லக்னோ அணி விளையாடிய முதல் இரண்டு சீசனிலும் பிளே ஆப் சுற்று வரை வந்தது. ஆனால் மூன்றாவது சுற்றில் லக்னோ அணி பெரிய சரிவை சந்தித்தது. இதனால் லக்னோ அணியின் கேப்டனான கே எல் ராகுலை அணி உரிமையாளர் கோயங்கா மைதானத்திலே வைத்து திட்டிய சம்பவமும் அரங்கேறியது.

இதனால் லக்னோ அணியிலிருந்து விலக கே எல் ராகுல் அப்போது முடிவெடுத்திருந்ததாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து அணி உரிமையாளர் கோயங்கா, ராகுலை அழைத்து விருந்து வைத்து சமாதானப்படுத்தினார். இந்த சூழலில் லக்னோ அணியில் இருந்து கம்பீர் ஏற்கனவே சென்றுவிட்ட நிலையில் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்க்கல் தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சென்று விட்டார். இதனால் லக்னோ அணியின் மென்டராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஜாகிர் கானை நியமித்தது. ஜாகீர் கான் பந்துவீச்சு மற்றும் புதிய வீரர்களை அடையாளம் காணும் பணிகளை செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும், மென்டருமான ஜாகிர் கான் ஆலோசித்து வந்தனர். இதில் முதல் வீரராக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது மிகப்பெரிய டிவிஸ்ட் ஒன்று நிகழ்ந்துள்ளது. கே எல் ராகுல் அணிக்கு வேண்டாம் என்றும் அவருக்கு பதில் வேறு ஒரு வீரரை தேர்வு செய்யலாம் என ஜாகிர் கான் முன்மொழிந்துள்ளார்.அதற்கு அவர் ஒரு காரணத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கே எல் ராகுலின் பேட்டிங் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற மாதிரி இல்லை. கே எல் ராகுல் எப்போதெல்லாம் அதிக பந்துகளை பிடித்து அதிக ரன்கள் அடிக்கிறாரோ அப்போதெல்லாம் லக்னோ அணி தோல்வியை தழுவி இருக்கிறது. கேஎல் ராகுல் ஸ்ட்ரைக் ரேட் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் கே எல் ராகுலை விட்டுவிட்டு வேறு ஒரு வீரரை தேர்வு செய்யலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கே எல் ராகுல் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனையாக இருக்கிறது என்பதால் தான் அவர் இந்திய டி20 அணியிலேயே சேர்க்கப்படுவதில்லை. தற்போது ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலுமே அவர் தடுமாறி வருகிறார். இந்த நிலையில் ஜாகிர் கான் கூறிய கருத்தும் சரியான வகையில் இருப்பதாக அணி நிர்வாகிகள் ஒப்பு கொண்டுள்ளனர்.

இதனால் இம்முறை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரானை தேர்வு செய்ய லக்னோ அணி முடிவு எடுத்துள்ளது. மேலும் நிக்கோலஸ் பூரானுக்கு 18 கோடி ரூபாய் கொடுத்து முதல் வீரராக லக்னோ தக்க வைக்கப் போகிறது. இதேபோன்று இரண்டாவது வீரராக ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் ஸ்டோனிசும் மூன்றாவது வீரராக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான மாயங் யாதவையும் தேர்வு செய்ய லக்னோ அணி முடிவு எடுத்திருக்கிறது.

இதேபோன்று இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஆயுஸ் பதோனி மற்றும் மோஷின் கான் ஆகிய இருவரை uncapped வீரராக லக்னோ அணி தேர்வு செய்ய உள்ளது. இதன் மூலம் ஐந்து வீரர்கள் லக்னோ அணிக்கு கிடைத்து விடுவார்கள். ஆறாவது வீரராக சமர் ஜோசப்பை ஆர் டி எம் கார்டு மூலம் லக்னோ வாங்க முடிவு எடுத்திருக்கிறது. இந்த சூழலில் டெல்லி அணியில் நிர்வாகம் மாறி இருப்பதால் ரிஷப் பன்ட் டெல்லியை விட்டு விலக போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரிஷப் பண்டை ஏலத்தில் எடுக்கவும் லக்னோ அணி ஆர்வம் காட்டி வருகிறது.

Story first published: Monday, October 28, 2024, 19:39 [IST]
Other articles published on Oct 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+