ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் 66-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் இந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். அவரே டாஸ் நிகழ்விலும் பங்கேற்றார்.
டாஸ் வென்ற பிறகு ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் பேசுகையில், "நாங்கள் முதலில் பந்துவீசி இருக்கிறோம். எங்கள் ஆட்டம் 50-50 யாகத் தான் இருக்கிறது. நாங்கள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் விளையாட இருக்கிறோம். அது சேஸிங்கில் எங்களுக்கு உதவும். நாங்கள் மிகவும் வெறுப்படைந்து இருக்கிறோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் அதன் பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்தோம்."

"நாங்கள் நிறைய டி20 கிரிக்கெட் ஆடியிருக்கிறோம். அந்த வகையில் இதை புரிந்து கொண்டு இருக்க வேண்டும். கடந்த போட்டியில்கூட நாங்கள் முதல் 17 ஓவர்களில் நன்றாக விளையாடினோம். அதன் பிறகு எங்கள் கவனத்தை சிதறவிட்டோம். இப்போது நாங்கள் ஐந்தாவது இடத்துக்காக விளையாடுகிறோம். இதற்கு முன் முதல் நான்கு இடங்களில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இருந்தோம்," என்று தனது ஆதங்கத்தைக் கூறினார்.
அடுத்ததாக, டாஸில் தோல்வி அடைந்தாலும் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், "நிச்சயம் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால், எங்களின் ஆட்டத்தின் மீது நான் மனநிறைவு அடையவில்லை. நாங்கள் இங்கிருந்து எங்கள் ஆட்டத்தை மேலே கொண்டு செல்ல வேண்டும். அணியில் ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடுகிறார்கள். இப்போது நாங்கள் பாதி வேலையை முடித்து இருக்கிறோம். இப்போது என்ன நடக்கிறது என்பதை மட்டுமே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜோஸ் இங்கிலீஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்," என்று கூறினார்.
அணிகள்:
பஞ்சாப் கிங்ஸ் (விளையாடும் லெவன்): பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நெஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்
பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் சப்: பிரவீன் துபே, விஜய் குமார் வைஷாக், சூர்யன்ஷ் ஷெட்ஜ், கைல் ஜாமிசன், சேவியர் பார்ட்லெட்
டெல்லி கேப்பிடல்ஸ் (விளையாடும் லெவன்): ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), செதிகுல்லா அடல், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மோஹித் ஷர்மா, முஸ்தஃபிசுர் ரஹ்மான், முகேஷ் குமார்
டெல்லி கேப்பிடல்ஸ் இம்பாக்ட் சப்: கே.எல். ராகுல், மன்வந்த் குமார், திரிபுர்ணா விஜய், அஜய் ஜாதவ் மண்டல், தர்ஷன் நல்கண்டே