Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL தொடரின் ரோல்ஸ் ராய்ஸ் கார் போன்ற வீரர் என்றால் இவர் தான்! பத்திரமா பார்த்துக்கனும்- Rhodes கருத்து

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரோல்ஸ் ராய்ஸ் கார் போன்ற வீரர் என்றால் அது இந்திய அணியின் நட்சத்திர இளம் வேகபந்துவீச்சாளர் மாயங் யாதவ் தான் என்று லக்னோ அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரூட்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீரர்கள் பந்து வீசினாலே அவர் ஏதோ வானத்தில் இருந்து வந்தது போல் ரசிகர்கள் பார்ப்பது உண்டு.

ஆனால் தற்போது எல்லாம் சர்வ சாதாரணமாக இந்திய வீரர்கள் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார்கள். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லியை சேர்ந்த மாயங் யாதவ் என்ற பவுலர் லக்னோ அணிக்காக விளையாடினார். இதில் மணிக்கு 155 புள்ளி எட்டு கிலோமீட்டர் வேகத்தில் வீசி பஞ்சாப் எதிரான தனது முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ipl 2025 lsg mayank yadav

ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அவருடைய எக்கனாமி வெறும் ஆறு புள்ளி ஒன்பது ஒன்பது என்ற அளவில் இருந்தது. இதை அடுத்து மாயங் காயம் ஏற்பட்டதால் அந்தத் தொடர் முழுவதும் விளையாடாமல் போனார். இந்த நிலையில் மாயங் யாதவ் குறித்து ஜான்டி ரூட்ஸ் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், நான் லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் கிடையாது. ஆனால் மோர்னே மோர்க்கல் தான் அந்தப் பணியை செய்தார். பந்துவீச்சாளர்களில் ரோல்ஸ் ராயல்ஸ் கார் போன்ற விலை மதிப்புடைய வீரராக தெரிகிறார்.நாம் எவ்வாறு ஆலன் டோனால்டை ரோல்ஸ் ராய்ஸ் என்று பாராட்டுவோமோ, அதே போல் இவர் லக்னோ அணியின் ரோல்ஸ் ராய்ஸ் ஆக விளங்குகிறார் என்று மோர்னே மோர்க்கல் தம்மிடம் கூறியதாக ஜாண்டி ரூட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பேசிய அவர் மாயங் காயம் அடைந்திருந்தாலும் அவரை தொடர் முழுவதும் அணி நிர்வாகம் கூடவே வைத்து அவருடைய உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஜாண்டி ரூட்ஸ் கூறியுள்ளார். இதன் மூலம் உன் மீது நாங்கள் அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறோம். உன்னிடம் திறமை இருக்கிறது என்பதை நாங்கள் உணர்த்த விரும்பியதாக ஜாண்டி ரூட்ஸ் கூறியுள்ளார்.

நாங்கள் அனைவரும் மாயங்கை கண்காணித்து வந்தோம் என்று குறிப்பிட்ட அவர் இது போன்ற வீரர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார். மாயங் பயிற்சியில் 30 நிமிடங்கள் எல்லாம் பந்து வீசத் தேவையில்லை. அவர் சிறிது நேரம் பயிற்சி செய்து உடல் அளவிலும் மனதளவிலும் சரியான நிலையில் இருப்பதை மட்டும் உறுதி செய்து கொண்டால் போதும் என்றும் ஜாண்டி ரூட்ஸ் கூறியுள்ளார்.

உம்ரான் மாலிக் இதே போல் தான் வேகமாக பந்து வீசி களத்திற்கு வந்தார். ஆனால் அவரிடம் சரியான கேம் ப்ளான் இல்லை. வேகம் மட்டும் போதாது. எந்த இடத்தில் பந்து வீசுகிறோம் என்பதை கவனம் செலுத்த வேண்டும்.இதனால் லக்னோ அணில் மாயங் யாதவை முக்கியமான போட்டிகளில் மட்டும் பயன்படுத்தி அவருக்கு அடிக்கடி ஓய்வு வழங்க வேண்டும் என்றும் ஜாண்டி ரூட்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, September 3, 2024, 8:00 [IST]
Other articles published on Sep 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+