Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025-ஒரே ஓவரால் மாயங் யாதவ் காட்டில் பண மழை! 20 லட்சம் ரூபாயிலிருந்து எவ்வளவு உயர போகுது பாருங்க

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்காக விளையாடிய மாயங் யாதவ் 156.7 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்தினார். இந்தத் தொடரில் மாயங் யாதவ் காயம் ஏற்பட்டு குறைந்த அளவிலே போட்டியில் விளையாடினார். எனினும் அபாரமாக பந்து வீசி ரன்களையும் கட்டுப்படுத்துவதில் மாயங் யாதவ் ஜொலித்தார்.

இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடிய மாயங் யாதவ், அதிகபட்சமாக மணிக்கு 149.9 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.

ind vs ban mayank yadav ipl 2025 lsg

ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதன்படி முதல் வீரருக்கு 18 கோடி ரூபாயும், இரண்டாவது வீரர்களுக்கு 14 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாயும் சம்பளம் வழங்க வேண்டும். இதே போன்று நான்காவது வீரருக்கு 18 கோடி ரூபாயும், ஐந்தாவது வீரர்களுக்கு 11 கோடி ரூபாயும் ஊதியம் தர வேண்டும்.

மேலும் இந்திய அணிக்காக விளையாடிய வீரருக்கு நான்கு கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த சூழலில் அக்டோபர் 30-ஆம் தேதிக்கு முன்பு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்த வீரர்கள் மட்டும்தான் சர்வதேச வீரராக அங்கீகரிக்கப்படுவார்கள் என்றும் பிசிசிஐ விதியை அறிவித்தது. இந்த சூழலில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மாயங் யாதவ் இந்திய அணிக்காக அறிமுகமாகிவிட்டதால் அவருடைய சம்பளம் அதிகரிக்க போகிறது.

கடந்த 2024 ஐபிஎல் ஏலத்தில் மாயங் யாதவ், 20 லட்சம் ரூபாய்க்கு தான் தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் இந்திய அணிக்கு விளையாடி இருப்பதன் மூலம் அவருக்கு நான்கு கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்தால் தான் ஏலத்தில் தக்கவைக்கும் முடியும். அது மட்டுமில்லாமல் மாயங் யாதவ், லக்னோ அணியின் ஸ்டார் வேக பந்துவீச்சாளராக உருவாகி இருக்கிறார். இதன் காரணமாக மாயங் யாதவ்வை 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் தக்க வைக்க லக்னோ அணி நிர்வாகம் முடிவு எடுத்திருக்கிறது.

கே.எல் ராகுலுக்கு 18 கோடி ரூபாயும், நிக்கோலஸ் பூரானுக்கு 14 கோடி ரூபாயும் மாயங் யாதவுக்கு 11 கோடி ரூபாயும் வழங்க லக்னோ அணி முடிவு எடுத்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் மாயங் யாதவ் அறிமுகமாகி இருந்திருந்தால் அவரை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். தற்போது தன்னுடைய ஆதி திறமையான பந்துவீச்சால் மாயங் யாதவ் 20 லட்சம் ரூபாயிலிருந்து 11 கோடி ரூபாய் சம்பளமாக பெறப்போகிறார்.

Story first published: Tuesday, October 8, 2024, 9:45 [IST]
Other articles published on Oct 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+