Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: "டேபிள் டாப் நல்லா இருந்துச்சா, சரி இறங்கு.." ஆர்சிபியை மீம்ஸ் போட்டு பொளக்கும் ரசிகர்கள்

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி தாங்கள் விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருந்தது. இதனால் ஆர் சி பி அணி இம்முறை கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.இந்த சூழ்நிலையில் ஆர் சி பி அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆர்சிபி அணி தற்போது மூன்றாவது இடத்திற்கு சரிந்து உள்ளது. ஆர் சி பி அணி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்றாலும், ஏதோ பத்து கோப்பையை வென்றது போல் அந்த அணி ரசிகர்கள் மற்ற அணி ரசிகர்களை கிண்டல் செய்வார்கள்.

IPL RCB Memes

இதன் காரணமாக ஆர் சி பி அணி தோற்கும் போதெல்லாம் சமூக வலைத்தளத்தில் உள்ளவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். சில மீம் கிரியேட்டர்ஸ் ஆர்சிபிஐ வைத்து செய்வார்கள். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் இன்று ட்ரெண்டான மீம்ஸ்களை பார்க்கலாம். ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து தற்போது கீழே இறங்கி இருக்கிறது.

இதனை கிண்டல் செய்யும் விதமாக சூரிய வம்சம் படத்தில் யானை மேலே உட்கார வைத்து ஒரு ரவுண்ட் அடித்து விட்டு நல்லா இருந்ததா கீழே இறங்கி வா என்று சரத்குமார் தனது பேரனை வாங்குவார். இது அண்மைக்காலமாக சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானது. இந்த டெம்ப்ளட்டை ஆர்சிபி அணி டேபிள் டாப்பில் முதலிடத்தில் இருந்த நிலையில் நல்லா இருந்ததா, சரி கீழே இறங்கி வா என்று ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

இதைப் போன்று ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போது அவர்களுடைய ரசிகர்கள் துள்ளி குதித்ததாகவும் தற்போது தோல்வியை தழுவியதன் மூலம் அவர்கள் அடங்கி போய் தற்போது மீண்டும் பூமிக்கு திரும்புவது போல் ஹெலிகாப்டர்ஸ் வந்து களமிறங்குவதை மீம்ஸாக போட்டு கிண்டல் செய்துள்ளனர்.

இதே போன்று சிராஜ் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடி 19 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணியை விட்டு நீக்கியதால் கோபத்துடன் சிராஜ் செயல்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை கிண்டல் செய்யும் விதமாக ஆர்சிபி அணி ரசிகர்கள், நல்லாருக்கியா நீ! ஏன் கோபப்படுகிறாய் என்று கேட்கும் மீம் டெம்ப்ளேட்டை வைத்துள்ளனர்.

இதே போன்று சமுத்திரம் திரைப்படத்தில் தம்பிக்கு இரண்டு அண்ணன்களும் காசு வழங்கும் டெம்ப்லேட்டை பயன்படுத்தி, கில்லுக்கு ஹர்திக் பாண்டியா 2 புள்ளிகளில் வழங்குவது போலவும், பின் விராட் கோலி இரண்டு புள்ளிகளை கில்லுக்கு வழங்கும்போது அண்ணன் ஏற்கனவே கொடுத்து விட்டார் என்று கில் சொல்வது போலவும், அப்போ நான் யாருடா என்று விராட் கோலி கேட்டு இரண்டு புள்ளிகளை வழங்குவது போலவும் டெம்ப்ளேட்டை வைத்திருக்கிறார்கள்.

Story first published: Thursday, April 3, 2025, 12:53 [IST]
Other articles published on Apr 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+