Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சில மூஞ்சிகளை பார்த்தா மட்டும் அடிக்கணும் போலவே இருக்கும்.. CSK, RCB-யை வைத்து தெறிக்கும் மீம்ஸ்

லக்னோ: 2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று நேற்றுடன் முடிவடைந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் பெங்களூரு அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் முடிவில் ரசிகர்கள் பல்வேறு மீம்ஸ்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

2025 ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை 8 அரை சதங்களை அடித்திருக்கிறார். கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களில் அவர் மொத்தமாக 19 அரை சதங்கள் மற்றும் 3 சதங்களை அடித்திருக்கிறார். இவை அனைத்தையும் வெறும் 42 இன்னிங்ஸ்களில் அடித்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டி, "அண்ணா! விட்டுருங்க அண்ணா!" என மற்ற இளம் வீரர்கள் கதறுவது போல மீம் வெளியிட்டுள்ளனர்.

Shreyas-iyer

ஸ்ரேயாஸ் ஐயர் மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக இருந்து இருக்கும் நிலையில், அந்த மூன்று அணிகளையும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பெறச் செய்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டி, "பிரகாஷ்ராஜ் விக்ரமைப் பார்த்து 'யார் சாமி இவன்? எங்க இருந்து வந்திருக்கான்?' என்று கேட்கும் மீம் வெளியிட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025 ஆம் ஆண்டு தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடிய போட்டிகள் அல்லாமல், வெளி மைதானங்களில் ஆடிய போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதை எடுத்து, "இனி எல்லாப் போட்டியையும் வெளி மைதானத்திலேயே ஆடும்படி அறிவிப்பு வெளியிடு" என மாணவர்கள் ரகளை செய்வது போல ஒரு மீம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்த ஆட்டமிழந்ததற்கு பிறகு, பெங்களூரு அணி சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால், அப்போது அந்த அணியின் தற்காலிக கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 33 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இதை அடுத்து, 'சர்பட்டா பரம்பரை' படத்தில் வருவது போல, வாத்தியார் (விராட் கோலி) வெளியே செல்வது போலவும், அப்போது ஒருவர் ஓடி வந்து, "ஜிதேஷ் ஷர்மா (கபிலன்) லக்னோ கூட ஸ்பேரிங் போட்டுட்டு இருக்கான்!" என்று சொல்வது போலவும் ஒரு மீம் வெளியிடப்பட்டுள்ளது.

ரிஷப் பண்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சதம் அடித்தார். இந்த ஆண்டு இதற்கு முன் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தார். இந்த இரண்டு ஆட்டங்கள் மட்டுமே இந்த ஆண்டு ரிஷப் பண்ட்டின் சிறப்பான பேட்டிங் செயல்பாடாக அமைந்தது. இதை அடுத்து, "எதற்காக எங்கள் அணிகளுக்கு எதிராக மட்டும் ஆடுகிறீர்கள்?" என கேள்வி கேட்பது போலவும், "சில மூஞ்சிகளைப் பார்த்தால் மட்டும் ஆடணும் போல இருக்கும்" என பதில் சொல்வது போலவும் வடிவேலு காமெடியை வைத்து மீம் வெளியிட்டுள்ளனர்.

Story first published: Wednesday, May 28, 2025, 13:19 [IST]
Other articles published on May 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+