Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நான் பேசமாட்டேன், என்னுடைய பேட் தான் பேசும்”.. பரிதாப ரோஹித்.. தெறிக்கவிடும் ஐபிஎல் மீம்ஸ்

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில் அது குறித்து பல்வேறு மீம்ஸ்கள் வெளியாகி உள்ளன. இந்த போட்டியில் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்திருந்தார். இதுவரை 30 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கிறார்.

அதில் அவர் எடுத்த ஸ்கோர்கள் அனைத்தும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இரண்டு முறை மட்டுமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து இருக்கிறார். ஐந்து முறை மட்டுமே 20 ரன்களுக்கும் குறைவான ஸ்கோரை எடுத்திருக்கிறார். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த பேட்ஸ்மேனாக அவர் இருக்கிறார். இதை சுட்டிக்காட்டி, "நான் பேசமாட்டேன், என்னுடைய பேட் தான் பேசும்" என மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

ipl-2025-memes-sai-sudharsans-consistency-sirajs-comeback

முகமது சிராஜ் சரியாக விக்கெட் எடுக்கவில்லை என்ற காரணத்தால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதாக ரோஹித் சர்மா முன்பு பேசியதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது முகமது சிராஜ் ஐபிஎல் தொடரில் இதுவரை பவர் பிளே ஓவர்களில் மட்டும் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதை அடுத்து முகமது சிராஜ் பரிதாபமாக ரோஹித் சர்மாவை பார்ப்பது போல மீம் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அணிகளில் குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே ஒருமுறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. மற்ற நான்கு அணிகளும் இதுவரை ஒரு கோப்பை கூட வெல்லவில்லை.

ipl-2025-memes-sai-sudharsans-consistency-sirajs-comeback

அதே சமயம், புள்ளிப் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய ஐந்து அணிகளும் சேர்ந்து மொத்தம் 15 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளன. எனவே, இந்த ஆண்டு இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத அணிகளின் ஆண்டு என மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

சாய் சுதர்சன் இதுவரை ஐந்து ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 273 ரன்கள் சேர்த்திருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை மூன்று அரை சதங்களை அடித்திருக்கிறார். இதை சுட்டிக்காட்டி, "உன்னைப் பார்த்தா சாய் சுதர்சன் மாதிரி இல்ல, விராட் கோலி மப்டில வந்தது மாதிரி இருக்கு" என மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

Story first published: Thursday, April 10, 2025, 13:10 [IST]
Other articles published on Apr 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+