Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ரியான் ரிக்கல்டன் அவுட்டாகியும், நடுவர் வைத்த டிவிஸ்ட்.. தவறு செய்தாரா கிளாசன்..விதி என்ன?

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை சன்ரைசர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ஒன்றில் ஒரு மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய மும்பை அணி ஹைதராபாத் அணியை வெறும் 162 ரன்களில் கட்டுப்படுத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்தபடியாக ஹென்றிச் கிளாசன் 28 பந்துகளில் 37 ரன்களும் அடித்திருந்தனர். இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் தங்களுடைய பேட்டிங்கை தொடங்கியது. இதில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

Henrich Klassen

குறிப்பாக ரோகித் சர்மா மூன்று சிக்ஸர்களை விளாசி 16 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.ரோகித் சர்மா இன்று பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்றொரு தொடக்க வீரரான ரியாண் ரிக்கல்டன் ஆட்டத்தின் 6.5 வது ஓவரில் செஷான் அன்சாரி வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஹென்றிச் கிளாசனிடம் கேட்ச் ஆனார்.

ரோகித் சர்மாவை தொடர்ந்து ரியான் ரிக்கல்டனும் ஆட்டம இழந்தார்.
இதனால் சன்ரைசர்ஸ் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதன் பிறகு தான் ஒரு டுவிஸ்ட் நடந்தது. இந்த பந்தை நடுவர்கள் நோ பால் என அறிவித்தனர். ஆனால் காலை அகலமாக வைத்ததற்காக இது நோபால் என அறிவிக்கப்படவில்லை.
கேட்ச் பிடிக்கும் போது ஹென்றிச் கிளாசன் ஸ்டெம்புக்கு முன்பே கையை வைத்து கேட்ச் பிடித்ததால் அதற்கு நோபால் என அறிவிக்கப்பட்டது.

விதிகள் படி விக்கெட் கீப்பர் ஸ்டெம்பருக்கு பின் தான் கையை வைத்து பிடிக்க வேண்டும்.
ஸ்டெம்ப்க்கு முன்பு கையை வைத்தால் அது நாட் அவுட் என அறிவிக்கப்பட்டு நோபாலும் வழங்கப்படும். இதனால் 21 ரன்களில் ஆட்டம் இழக்க வேண்டிய ரியாண்ட் ரிக்குல்டன் அதிரடியாக விளையாடி 31 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

முதலில் கிளாசன் அபாரமான கேட்சை பிடித்ததாக ரசிகர்கள் பாராட்டிய நிலையில் கடைசியில் அதை விதிகளுக்கு மீறி பிடிக்கப்பட்ட கேட்ச் என தெரிய வந்தது. எனினும் கிளாசன் சரியாகத்தான் பிடித்தார் என்றும், நடுவர்கள் தவறான முடிவு அறிவித்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, April 17, 2025, 23:28 [IST]
Other articles published on Apr 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+