IPL 2025: 15 ஆண்டுக்கால சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சூர்யகுமார்
மும்பை: ஐபிஎல் 2025ஆம் ஆஒணடு சீசனில் மும்பை அணி இந்த அளவு அபாரமாக செயல்படுகிறத என்றால், அதற்கு தனி ஒருவரின் பேட்டிங் தான் காரணம். அவர் தான் சூர்யகுமார் யாதவ். நடப்பு சீசனில் செம பார்மில் உள்ள அவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
ஒரு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேனாக அதிக ரன்கள் எடுத்தவராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அவர் மிஞ்சியுள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை எட்டினார்.

2010 சீசனில் சச்சின் டெண்டுல்கரின் 618 ரன்கள் 15 ஆண்டுகளாக பதிவாக இருந்தது. அந்த ஆண்டு பேட்டிங்கில் சச்சின் ஆரஞ்சு தொப்பி வென்றவராகவும் திகழ்ந்தார். இந்த சூழலில் 2025இல், சூர்யகுமார் யாதவ் சச்சினின் இந்த சாதனையை மிஞ்சினார். 2023இல் 605 ரன்களுடன் நெருங்கியிருந்த அவர், இந்த முறை லீக் சுற்றை 640 ரன்களுடன் முடித்தார்.
மேலும் அணி பிளே-ஆஃப்களில் இடம்பெறவுள்ளதால் மேலும் ரன்களை குவிக்க வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், பல ஐபிஎல் சீசனில் 600 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றார். ஒரு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்
2025 சீசன்சூர்யகுமார் யாதவ்- 640*
2010 சச்சின் டெண்டுல்கர்- 618
2023 சூர்யகுமார் யாதவ்-605
2011 சச்சின் டெண்டுல்கர்-553
குறிப்பாக, அதே இன்னிங்ஸில், டி20 களில் தொடர்ச்சியாக 25+ ரன்கள் எடுத்த அதிக இன்னிங்ஸ்கள் (14) என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதன் மூலம், 2019-2020 சீசனில் 13 முறை இவ்வாறு எடுத்த தென்னாப்பிரிக்காவின் டெம்பா பவுமாவை மிஞ்சினார்.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் இந்த சாதனை நிகழ்ந்தது, மூன்றாவது இடத்தில் பேட்டிங்கிற்கு வந்த அவர், இன்னிங்ஸை அற்புதமாக நங்கூரமிட்டு, 38 பந்துகளில் 57 ரன்கள் விளாசி, மும்பை 20 ஓவர்களில் 184/7 என்ற ஸ்கோரை எட்ட உதவினார். 2025 ஐபிஎல் பருவத்தில் 640* ரன்களுடன், சூர்யகுமார் இப்போது மொத்த ரன்-அடிப்பவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications