Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் ஆக்கிய ஹர்திக்..மும்பை செய்தது சரியா? விதி என்ன சொல்கிறது?

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ மும்பை அணிகள் மோதிய ஆட்டம் ஒன்றில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் ஒன்று நடந்தது. அதாவது லக்னோ அணி நிர்ணயித்த எட்டு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை எதிர்கொண்டு விளையாடிய போது மும்பை அணி வெற்றி அருகே சென்றது.

கடைசி இரண்டு ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் சர்துல் தாக்கூர் அபாரமாக பந்துவீசி வெறும் ஏழு ரன்கள் மட்டுமே, 19வது ஓவரில் கொடுத்தார். மும்பை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இம்பேக்ட் வீரராக திலக் வர்மா களமிறங்கினார்.

Tilak Varma

இந்த நிலையில் திலக் வர்மா எவ்வளவு முயற்சித்தும், பந்து அவரது பேட்டில் பட்டு பவுண்சை செல்லவில்லை.இதனால் கடுப்பான ஹர்திக் பாண்டியா 19வது ஓவரின் ஐந்தாவது பந்தில் திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் ஆகி செல்லும்படி கூறியதை அடுத்து அவர் அவுட் ஆகாமல் பெவிலியன் சென்றார். மும்பை செய்தது சரியா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ஒருவரை அவுட் ஆகாமலே பெவிலியன் செல் என்று கூறியது இதுதான் முதல்முறையாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விதிப்படி ஒரு வீரர் விளையாடும் போது காயம் ஏற்பட்டால் அதனை நடுவரிடம் சொல்லிவிட்டு பெவிலியன் நோக்கி செல்லலாம். இதை அடுத்து அந்த வீரர் மீண்டும் பேட்டிங் செய்ய தயாரானால் களத்திற்கு வந்து விளையாடலாம். இதற்கு ரிட்டையர்ட் ஹர்ட் என்று சொல்வார்கள்.

ஆனால் தற்போது தங்களால் சரியாக விளையாட முடியவில்லை. தாங்கள் பந்தை வீணடிப்பதற்கு பதிலாக வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் சரியாக இருக்கும் என நினைக்கும் வீரர்கள் தாங்களே களத்தை விட்டு வெளியேற முடிவு எடுக்கிறார்கள். இதற்குப் பெயர் ரிட்டயர்ட் அவுட். இது அவுட் ஆகியதற்கு சமம் தான்.

இதனால் மீண்டும் பேட்டிங் செய்ய முடியாது. ஐபிஎல் தொடரில் அஸ்வின் இது போல் ஏற்கனவே ரிட்டயர்டு அவுட் ஆகி களத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி செய்தது விதிப்படி இங்கு தவறு கிடையாது. ஆனால் திலக் வர்மா அபாரமாக விளையாடக்கூடிய இளம் வீரர். அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் சென்னையில் நடைபெற்ற போது அவர்தான் தனி ஆளாக நின்று அணியை வெற்றி பெற வைத்தார். இப்படி இருக்கும் ஒரு வீரரை நீ சரியாக விளையாடவில்லை வெளியே செல் என்று கூறுவது அவருடைய உத்வேகத்தை கடுமையாக பாதிக்கும்.

இதனால் அந்த இளம் வீரரை நம்பி கடைசி வரை வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்றும் இது ஹர்திக் பாண்டியா செய்த மெகா சொதப்பல் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். நம்மால் அடிக்க முடியவில்லை என்ற விரக்தியிலே திலக் வர்மா பெவிலியன் நோக்கி சென்று அங்கு சோகமாக அமர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திலக் வர்மாவுக்கு பதில் வந்த மிட்செல் ஷாண்ட்னரும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா சிங்கிள் ஓட கூட மறுத்தார். இதுக்கு பேசாமல் பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாமே என்ற காமெடியை தான் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Story first published: Saturday, April 5, 2025, 7:30 [IST]
Other articles published on Apr 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+