Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: இவங்க கிட்ட பந்து கொடுத்தால் போதும், என் பணி சுலபமாகிவிடும்.. MI வெற்றி குறித்து ஹர்திக்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய எட்டாவது வெற்றியை பதிவு செய்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 11 வது முறையாக மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மும்பை அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே அபாரமாக இருக்கிறார்கள். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, பும்ரா சாட்ணர் போன்ற வீரர்கள் அணியில் இருக்கும் போது எனக்கு எப்போது தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவர்களிடம் பந்தை கொடுத்தால் போதும்.

Hardik Pandya

அவர்கள் அபாரமாக செயல்பட்டு எங்களுக்கு விக்கெட்டை எடுத்து தருவார்கள். ஆட்டத்தையே கட்டுப்படுத்தும் பந்துவீச்சு அவர்களிடம் இருக்கின்றது. இதன் மூலம் என்னுடைய பணி மிகவும் சுலபமாக மாறிவிட்டது. முதலில் 180 ரன்கள் எடுத்தால் அது நல்ல இலக்கு என்று நினைத்தேன்.

ஆனால் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் 160 ரன்கள் எடுத்திருந்தாலே போதும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. இருப்பினும் எங்கள் அணி வீரர்களுடைய ஆட்டத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. சூரிய குமாரும் நமன் திரும் அபாரமாக விளையாடினார்கள்.

குறிப்பாக நமன் களத்திற்கு நேராக வந்து சிக்ஸர் பவுண்டரி என அடித்தது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது என்று ஹர்திக் பாண்டியா கூறினார். மழை குறுக்கிட்டதால் ஹர்திக் தனது பேச்சை முடித்து கொண்டார். முன்னதாக பேசிய ஷார்ட்நர் மும்பை அணிக்காக என்னுடைய பணியை செய்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது.

நாங்கள் எப்போதுமே பந்துவீச்சில் ஒரு நல்ல அணியாக இருக்கின்றோம். சூரிய குமாரும் நமன் தீரும் அபாரமாக செயல்பட்டு எங்களை ஒரு நல்ல இலக்கிற்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். பும்ரா போன்ற ஒரு வீரர் அணியில் இருக்கும் போது அது மற்ற பவுலர்களுக்கும் பணியை எளிதாக மாற்றி விடுகிறது. நாங்கள் டெல்லி அணி பவுலர்கள் வீசிய விதத்தை பார்த்து அதே ஸ்டைலை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினோம் என்று ஷாட்னர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 21, 2025, 23:54 [IST]
Other articles published on May 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+