Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: வெற்றியால் துள்ளி குதிக்க மாட்டோம்.. அடக்கமாக இருப்போம்.. மும்பை அணி கேப்டன் ஹர்திக்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து ஆறாவது வெற்றியை பெற்று அசத்தி இருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மும்பை அணி 11 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியும் என 14 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

தற்போது ராஜஸ்தானை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதை அடுத்து அவர்களது 1.27 என்ற அளவில் ரன் ரேட் இருக்கிறது. இந்த வெற்றியால் நாங்கள் துள்ளி குதிக்க மாட்டோம் என்றும் அடக்கமாக நடந்து கொள்வோம் என்றும் ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார்.

Hardik Pandya

இது குறித்து பேசிய அவர், நாங்கள் இன்று பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் என்று சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றோம். பேட்டிங்கில் கூடுதலாக ஒரு 15 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் அதை மட்டும் தவற விட்டு இருக்கின்றோம்.

நானும் சூரிய குமாரும் எந்த மாதிரி ஷாட் ஆடி ரன்களை சேர்ப்பது என்பது குறித்து அதிகமாக பேசுவோம். பில்டர்கள் இல்லாத இடத்தில் கேப் பார்த்து அடித்தால் நிச்சயம் ரன்கள் கிடைக்கும். எங்கள் அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் மற்றும் ரியான் ரெகுல்டன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதிரடியாக ஆட வேண்டும் என்ற உத்வேகத்துடன் ரியான் ரெகுல்டன் விளையாடினார்.

பேட்ஸ்மேன்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து விளையாடி இருக்கிறார்கள். பந்தை பௌண்டரிக்கு அடிப்பது, ரன்கள் வேகமாக ஓடுவது என தங்களுடைய திறமையை அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதேபோன்று பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எனக்கு எந்த பவுலர்கள் பெயரை விடுவது, சொல்வது என்றே தெரியவில்லை.

எங்கள் பௌலரின் படை அனுபவம் வாய்ந்ததாக இருக்கின்றது. எனவே அவர்களை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை நாங்கள் தெளிவான மனநிலையில் இருக்கின்றோம். நாங்கள் சிம்பிள் கிரிக்கெட்டை தான் விளையாட போகிறோம். அதுதான் எங்களுக்கு கை கொடுக்கின்றது. இந்த வெற்றி தொடரும் என்று நம்புகிறோம். இவ்வளவு வெற்றி பெற்றாலும், நாங்கள் அடக்கமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். நாங்கள் இதே போல் முழு கவனத்துடன் செயல்படுவோம் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 1, 2025, 23:56 [IST]
Other articles published on May 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+