For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித், சூர்யகுமாரை மறைமுகமாக சாடிய ஹர்திக்..தோல்விக்கான காரணத்தை சொன்ன போது இதை கவனச்சீங்களா?

மும்பை: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணி வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் மும்பை அணி 4 போட்டிகளில் தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து ஹர்திக் பாண்டியா பேசியதை தற்போது பார்க்கலாம்.

இந்தப் போட்டி நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்திருக்கும். ஆடுகளம் அவ்வளவு அருமையாக இருந்தது. நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது என்னிடமே நான் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் மீண்டும் வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கிறோம்.

Hardik Pandya

இது குறித்து என்ன சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஆடுகளம் இருக்கும் நிலையை பார்த்து என்னுடைய பௌலர்களை நான் விமர்சிக்க வேண்டாம் என நினைக்கின்றேன். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் பந்து வீச பவுலரிடம் மறைக்க எதுவுமே இல்லை. செயல்முறை திட்டத்தில் தான் அனைத்துமே இருக்கின்றது. நிச்சயமாக பேட்ஸ்மேன்களை உங்களால் தடுக்க முடியும்.

ஆனால் பவுலர்கள் மீது எந்த ஒரு கடின விமர்சனத்தையும் நான் வைக்க விரும்பவில்லை. ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் பந்து வீசுவது என்பது மிகவும் கடினம். மேலும் எங்களிடம் பல வகையான பவுலர்களும் இல்லை. நாங்கள் ஒரு பத்து பன்னிரண்டு ரன்களை கூடுதலாக குறைத்து விட்டோம்.

அதை தான் என்னால் சொல்ல முடியும். ரோகித் சர்மா கடந்த ஆட்டத்தில் இல்லாததால் தான் நமந்தீரை தொடக்க வீரராக களம் இறங்கினார். தற்போது ரோகித் சர்மா வந்துவிட்டதால் நாங்கள் நமன் தீரை கீழ் வரிசையில் களம் இறக்கினோம். திலக் இன்று அபாரமாக பேட்டிங் செய்தார். பல பேருக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்கின்றேன். கடந்த போட்டிக்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தான் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை.

இந்த காரணத்தால் தான் அவரை நாங்கள் இம்பேக்ட் வீரராக களம் இறக்கி அவரை மீண்டும் திருப்பி பெவிலியனுக்கு வர சொன்னோம். ஆனால் இன்று அவர் அபாரமாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் பவர் பிளே என்பது மிகவும் முக்கியம். முதல் இரண்டு ஓவர்கள் அதிரடியாக ஆடினோம். ஆனால் அதன் பிறகு எங்களால் ரன் குவிக்க முடியவில்லை.

அதேபோன்று நடு ஓவர்களிலும் நாங்கள் போதிய ரன் அடிக்கவில்லை. இந்த இரண்டும் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. ஆர்சிபி பவுலர்கள் தங்களுடைய திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்கள்.
அவங்களுடைய பந்து வீச்சை கடைசியில் எங்களால் அடிக்க முடியவில்லை.

பும்ரா எங்கள் அணியில் வந்திருப்பது எங்கள் அணியின் பலத்தைக் கூட்டுகிறது. அவர் என்னுடைய பணியை மிகவும் சுலபமாக ஆக்கிவிட்டார். இன்றைய ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்கள் எங்களுக்கு நடந்து இருக்கிறது. நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். களத்திற்கு சென்று உங்களுடைய சிறந்த பங்களிப்பை கொடுங்கள். நாங்கள் அனைவரும் வீரர்களுக்கு துணையாக இருக்கின்றோம். எங்களுக்கு தேவையான முடிவு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.

Story first published: Monday, April 7, 2025, 23:56 [IST]
Other articles published on Apr 7, 2025
English summary
IPL 2025- MI Captain Hardik Pandya Takes a indirect dig at Rohit and suryakumar vs RCB
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+