Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவில் இருக்கும் குட்டி ஹர்திக் பாண்டியா.. தட்டி தூக்க காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ்!

சென்னை : ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருந்து தங்களுடைய திறமையை நிரூபிக்கிறார்கள். அப்படி U-19 கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அணியில் முக்கிய ஆல்ரவுண்டராக இடம்பெற்றவர் தான் ராஜவர்த்தன் ஹங்கர்கேகர்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அபாரமாக விளையாடக்கூடிய ராஜவர்த்தன் ஹங்கர்கேகரை ரசிகர்கள் குட்டி ஹர்திக் பாண்டியா என்று அழைத்தார்கள். இந்த நிலையில் ராஜவதர்த்தன் ஹங்கர்கேகரை சிஎஸ்கே அணி ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

ipl 2025 ipl retention cricket CSK

எனினும் ஹங்கர்கேகருக்கு 2023 ஐபிஎல் போட்டியில் வெறும் இரண்டு ஆட்டங்களில் தான் விளையாடினார். இதில் மொத்தமாக மூன்று விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். எனினும் ராஜவர்த்தன் ஹங்கர்கேகரை திறமை வாய்ந்த வீரராக அறியப்பட்டாலும் அவருக்கு சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனின் களமிறங்க வாய்ப்பே அளிக்கப்படவில்லை.

இது ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே இருந்தது. சிஎஸ்கே அணி இவரை ஏலத்தில் வாங்கும் போது மும்பை அணி கடுமையாக போட்டி போட்டது. காரணம் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக இவர் இருப்பார் என மும்பை அப்போது நினைத்தது. இந்த சூழலில் மெகா ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே அணி குறிப்பிட்ட தகுந்த வீரர்களை தான் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

அதில் ராஜவர்தன் ஹங்கர்கேகர் நிச்சயம் இடம் பெற வாய்ப்பு இல்லை. வேண்டுமென்றால் right to match கார்டை பயன்படுத்தி ராஜவர்தன் ஹங்கர்கேகரை சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வாய்ப்பை இவருக்காக தோனி பயன்படுத்துவாரா என்ற சந்தேகம் இருக்கின்றது. இந்த சூழலில் தான் ராஜவர்த்தன் ஹங்கர்கேகரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது.

ஹர்திக் பாண்டியா ஏற்கனவே அணியில் உள்ள நிலையில் ராஜவர்த்தன் ஹங்கர்கேகர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தால் அது அவருக்கு மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் நன்மையை கொடுக்கும். ஏற்கனவே பொலார்ட் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி பினிஷிங்கில் தடுமாறி வருகிறது.

இந்த சூழலில் ராஜவர்த்தன் ஹங்கர்கேகரை பயன்படுத்த மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் எப்படியும் மெகா ஏலத்தில் இவருடைய பெயர் வரும்போது தட்டி தூக்கி விடலாம் என அம்பானி குழுவினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Story first published: Wednesday, August 21, 2024, 19:49 [IST]
Other articles published on Aug 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+