For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL: என்னை யார் எப்படி சொன்னாலும் கவலையில்லை! நல்ல வேலை பும்ராவை எதிர்கொள்ள தேவையில்ல- வில் ஜாக்ஸ்

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வில் ஜாக்சை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.அப்போது அவருக்காக ஆர் டி எம் கார்டை பயன்படுத்தாத ஆர் சி பி அணி நிர்வாகத்தை மும்பை அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி கை கொடுத்து நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில் வீல் ஜாக்ஸ் பேட்டிங்கில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். நடப்பு தொடரில் வில் ஜாக்ஸ் பேட்டிங்கில் ஒன்பது போட்டிகள் விளையாடி மொத்தமாகவே 142 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

Will Jacks

இதில், அதிகபட்சமாக 36 ரன்கள் ஆகும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 122. சராசரி 20 தான். ஆனால் பந்துவீச்சில் ஒன்பது போட்டியில் விளையாடி மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் அவருடைய எக்கனாமி வெறும் ஏழு என்ற அளவில் இருக்கின்றது. இப்படி வில் ஜாக்ஸ் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதால் அவர் மும்பை அணியில் தவிர்க்க முடியாத வீரராக விளங்கி வருகிறார்.

இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிராக ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றார். அப்போது வில் ஜாக்ஸ் இடம், நீங்கள் பார்ட் டைம் பௌலரா என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்தவர், நான் ஒரு பேட்டர் பந்து வீசவும் தெரியும். என்னுடைய பந்து வீச்சையும் நான் முக்கியமானதாக எடுத்துக் கொள்கின்றேன்.

அதற்காக நான் கடினமாக உழைத்து வருகின்றேன். எனவே என்னை பார்ட் டைமர் என்று நான் கருதுவதில்லை. அப்படி யாரேனும் சொன்னாலும் அது குறித்து நான் கவலைப்படுவதும் இல்லை. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினேன். ரிஷப் பண்ட் எவ்வளவு அபாயகரமான வீரர்கள் என்று எங்களுக்கு தெரியும். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆப் ஸ்பின் வீசுவது என்பது மிகவும் முக்கியமாகும்.

எனக்கு இரண்டு விக்கெடுகள் கிடைத்தது என்பது மிகவும் மகிழ்ச்சியான கருதுகின்றேன். இங்கு உள்ள நேரத்தை நான் மகிழ்ச்சியுடன் செலவழிக்கின்றேன். மும்பை அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதன் மூலம் எனக்கு உச்சபட்ச நம்பிக்கை கிடைக்கின்றது. நாங்கள் நல்ல விஷயத்தை தொடர்ந்து காலத்தில் செயல்பட வேண்டும் என்று நினைக்கின்றேன். பும்ரா மிகச் சிறந்த வீரராக இருக்கின்றார். அவர் பந்துவீச்சை வலை பயிற்சி எதிர்கொள்ளவே கஷ்டமாக இருக்கும். நாங்கள் இருவரும் ஒரே அணியில் இருப்பது மகிழ்ச்சி. ஏனென்றால் அவரை நான் போட்டியில் எதிர்கொள்ள தேவையில்லை என்று வில் ஜாக்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 27, 2025, 23:18 [IST]
Other articles published on Apr 27, 2025
English summary
IPL 2025- MI New Player Will Jacks says He does not care about Being Called Part timer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+