Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025- மீண்டும் சொதப்பிய ரோகித்.. MI அணியை காப்பாற்றிய திலக், சூர்யகுமார்.. DCக்கு சவாலான இலக்கு

டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதும் 29 வது லீக் ஆட்டம் டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. மும்பை அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில் டெல்லி அணி முதலிடத்தில் இருக்கிறது.

இந்த சூழலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் அதிரடியாக விளையாட முற்பட்டனர்.

MI vs DC

ரோகித் சர்மா இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 150 ஸ்ட்ரைக் ரேட் இருந்தார். எனினும் ரோஹித் சர்மா 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதேபோன்று ரியான் ரிக்கல்டன் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சர் என 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 5 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 28 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இரண்டு ரன்களில் ஆட்டம் இழக்க திலக் வர்மா மட்டும் போராடி மும்பை இந்தியன்ஸ் அணியை சரி விலிருந்து மீட்டார். திலக் வர்மா 6 பவுண்டரி, மூன்று சிக்சர் என 33 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இறுதியில் நமன் தீர் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி,2 சிக்சர்கள் அடங்கும்.

இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி பந்துவீச்சு தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். திலக் வர்மா ஒரு போட்டியில் ரன் அடிக்க முடியாததால் ரிட்டயர்டு அவுட் ஆனார். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு அரை சதம் அடித்து நல்ல கம்பேக்கை கொடுத்திருக்கின்றார்.

Story first published: Sunday, April 13, 2025, 21:35 [IST]
Other articles published on Apr 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+