Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: மும்பைக்கு மழை வைத்த ஆப்பு.. ஆட்டம் தொடங்குவதில் தாமதம்.. ரத்தானால் என்ன ஆகும்?

அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் அணிகள் மோதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குவாலிபயர் 2 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் ஆர் சி பி அணியை எதிர்கொண்டு விளையாடும்.

தோல்வியை தழுவும் அணி தொடரை விட்டு வெளியேறும். இதனால் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? இல்லை பஞ்சாப் அணி ஆர்சிபி உடன் மோதுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

MI vs PBKS

இந்த சூழலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இதை அடுத்து ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மழை கொட்டியது. இதனால் மைதான ஊழியர்கள் தார்பாயால் மைதானத்தை மூடி இருக்கிறார்கள். தற்போது மழை காரணமாக போட்டி தடைப்பட்டு இருக்கிறது.

9.30 மணி முன்பு போட்டி தொடங்கினால் முழு 20 ஓவரும் நடைபெறும். அதற்கு மேல் சென்றால் ஓவர்கள் குறைக்கப்படும். ஒருவேளை மழை குறுக்கிட்டு டக்வொர்த் லூயிஸ் விதி அமிலுக்கு வந்தால், அது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும்.

ஒருவேளை மழை பெய்து ஆட்டம் தொடர முடியாது நிலை ஏற்பட்டால் ரிசர்வ் டே கிடையாது. இதனால் ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். ஏனென்றால் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் மும்பையை விட அதிகமாக ரன் ரெட்டை பெற்று முதல் இடத்தில் இருந்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும்.

Story first published: Sunday, June 1, 2025, 19:53 [IST]
Other articles published on Jun 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+