Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஆட்டத்தையே மாற்றிய கேட்ச் மிஸ்..தலையில் கை வைத்த நீதா அம்பானி..சோக கடலில் மும்பை நிர்வாகம்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணி குவாலிபயர் ஆட்டத்தில் பஞ்சாப் உடன் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறுகிறது. இதன் மூலம் ஆறாவது முறையாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது பைனலுக்கு செல்லாமல் வெளியேறி விட்டது.இதன் காரணமாக இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் பல பரீட்சை நடத்தும். ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு புதிய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறது.

இந்த நிலையில் மும்பை அணி 200 ரன்கள் மேல் முதலில் பேட்டிங் செய்து குவித்தால் அந்த அணி தோற்றதே கிடையாது என்ற வரலாறு இருக்கிறது. ஏனென்றால் மும்பை அணியின் பந்துவீச்சு அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருக்கும். கடும் நெருக்கடியை ஏற்படுத்தி ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட் மூலம் ஆட்டத்தையே மாற்றும் மேஜிக் மும்பை இடம் இருக்கிறது.

MI vs PBKS

ஆனால் மும்பை அணி நேற்று பந்து வீசும் போது ஒரு மிகப்பெரிய தவறு செய்தது. குறிப்பாக பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் இங்கிலீஷ் 38 ரன்களில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்ரேயாஸ் உடன் நெஹல் வதேரா ஜோடி சேர்ந்தார். வதேரா நன்றாக ஆடக்கூடிய வீரர். அவர் ஆட்டத்தின் பத்தாவது ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். அவர் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்த வேண்டும் என்று மும்பை அணி திட்டம் போட்டது

அதன்படி ஹர்திக் ஆப் சைடுக்கு வெளியே வீசிய மெதுவான பவுன்சரை அடித்து ஆட வதேரா முற்பட்டார். அப்போது அது Deep fine leg திசையில் நின்று கொண்டிருந்த பவுல்ட் இடம் பந்து சென்றது. எனினும் பவுல்ட், இந்த எளிய கேட்சை பிடிக்காமல் மிஸ் செய்தது மட்டுமல்லாமல் பந்து பவுண்டரிக்கு சென்றது.

இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த கேட்ச் மிஸ் ஆனதை பார்த்த அம்பானி மனைவியான நீதா அம்பானி, சோபாவில் சாய்ந்து கொண்டு சோகத்தில் ஆழ்ந்தார். பவுல்ட் கேட்ச் செய்ததை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் மைதானத்தில் அப்படியே அமர்ந்து தலையில் கை வைத்தார். இந்த ஒரு சம்பவம் மும்பை அணியில் தோல்விக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது.

Story first published: Monday, June 2, 2025, 3:15 [IST]
Other articles published on Jun 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+