Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: ஷமி சொல்றது எல்லாம் கட்டுக்கதை.. நம்பாதீங்க! அப்படி ஒரு மண்ணும் நடக்கல.. கடுப்பான ஸ்டார்க்

மும்பை: ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பேட்ஸ்மேன்கள் பட்டையை கிளப்பி வந்த நிலையில் பவுலர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஹீரோக்களாக மாறியிருக்கின்றனர். பஞ்சாப், கொல்கத்தா அணி மோதிய ஆட்டத்தில் வெறும் 103 என்ற இலக்கை எட்ட முடியாமல் கொல்கத்தா அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதில் சாஹல் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதேபோன்று நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வீரர் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற வைத்தார்.

Starc

இந்த நிலையில் பந்தில் எச்சில் தடவ விதிக்கப்பட்ட தடையை தற்போது பிசிசிஐ நீக்கி இருக்கிறது. மேலும் பணிப்பொலிவால் பந்து பாதிக்கப்பட்டால் புது பந்தை எடுத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதில் இந்த எச்சில் தடவுவதால் பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆவதாக சமி உள்ளிட்டோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நட்சத்திர கிரிக்கெட் வீரர் சமி சொன்னது கட்டுக்கதை என்றும் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் நான் சமி சொன்னதை கேட்டேன். அது ஒரு கட்டுக் கதை என்று நினைக்கின்றேன். நான் அதையெல்லாம் பயன்படுத்த மாட்டேன். சில வீரர்கள் அதை நம்புகிறார்கள்.

எச்சிலுக்கும் வியர்வை தடவுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை.இது பந்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஒருவேளை சிவப்பு நிற பந்தில் வேண்டுமானாலும் நிச்சயம் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில், அப்படி எதுவும் நடைபெறாது என்று ஸ்டாக் கூறியுள்ளார்.

பந்தில் எச்சில் தடவும் முறையை அனுமதித்ததற்குப் பிறகு பந்து நன்றாக ரிவர்ஸ் ஆகிறது என சமி, மோகித் சர்மா, ஆர்ஸ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில் ஸ்டார்க் அது ஒரு கட்டுக் கதை என்று கூறி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இதனால் இதில் எது உண்மை என்று கிரிக்கெட் வல்லுனர்களும் முன்னாள் வீரர்களும் விளக்கமளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Thursday, April 17, 2025, 17:45 [IST]
Other articles published on Apr 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+