Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: தோனி என்னை மரியா ஷரப்போவா என்று தான் அழைப்பார்.. மோகித் சர்மா கலகல பேச்சு

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு காலத்தில் சிஎஸ்கே அணியின் அறிமுகமாகி பின்னர் இந்திய அணிக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் மோகித் சர்மா. 2013 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மோகித் சர்மா விளையாடினார்.

அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு மோகித் சர்மா சிஎஸ்கே அணியில் ஒரு போட்டியில் இடம் பெற்று இருந்தார். தோனி கண்டெடுத்து மோகித் சர்மாவை ஒரு சர்வதேச பவுலராக மாற்றினார். தற்போது 36 வயதாகி இருக்கும் மோகித் சர்மா டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.

Mohit sharma

நடப்பு ஐபிஎல் தொடர் குறித்து பேசிய அவர் தற்போது பிசிசிஐ பந்தில் எச்சில் தடவ அனுமதி அளித்திருப்பது 100 சதவீதம் பவுலர்களுக்கு உதவியாக மாறியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று மைதானத்தில் பனிப்பொழிவும் பெரிய அளவு இல்லாததால் பந்து தற்போது நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆவதாகவும் மோகித் சர்மா கூறியுள்ளார்.

இதேபோன்று 11வது ஓவருக்கு பிறகு பந்தை மாற்றும் முறையும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியின் போது புதிய பந்து வழங்கப்பட்டதாகவும், அதை வைத்து கரன் சர்மா அபாரமாக பந்து வீசியதாகவும் மோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தோனி குறித்து பேசிய ரோஹித் சர்மா, தோனி ஒரு நல்ல கேப்டன் என்றும் நமக்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தோனி தம்மை டென்னிஸ் வீராங்கனை மரியா சரபோவாவுடன் ஒப்பிட்டு பேசுவார் என்றும் கூறியுள்ளார். இதற்கு காரணம் மரியா சரப்போவா, டென்னிஸ் ஆடும் போது கத்திக் கொண்டே ஆடுவார்.

நானும் பந்து வீசும் போது அதைப்போல் கத்திக் கொண்டே பந்து வீசுவேன். இதனால்தான் தோனி என்னை சரப்போவா என்று அழைப்பார். நான் இப்படி கத்திக் கொண்டு வீசும் போது பேட்ஸ்மேன் நான் ஏதோ 140 கிலோ மீட்டர் வேகத்தில் மணிக்கு வீசப் போகிறேன் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் பந்து வேகம் குறைவாக தான் வரும். இதனால் நான் கத்துவது எனக்கு நல்ல பலனையே கொடுத்தது என்றும் மோகித் சர்வா கூறி உள்ளார்.

Story first published: Tuesday, April 15, 2025, 21:12 [IST]
Other articles published on Apr 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+