Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு சீசனிலும், அதிக விக்கெட் வீழ்த்தி பர்பிள் நிற கேப் வென்ற பவுலர்கள் யார்?

மும்பை : ஐபிஎல் தொடரில் ரன் விருந்து மட்டுமல்லாமல் விக்கெட் வேட்டையும் நடைபெறும். டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பவுலர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கு ஒவ்வொரு சீசனிலும் பர்பில் நிற தொப்பியை விருதாக வழங்கி பிசிசிஐ கௌரவித்து வருகிறது.

அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் இருந்து தற்போது வரை யார் அதிக விக்கெட்டு களை வென்று இந்த பர்பிள் நிற தொப்பி விருதை வாங்கி இருக்கிறார்கள் என்று தற்போது பார்க்கலாம். 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சொகையல் தன்வீர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் நிற தொப்பியை வென்றார்.

IPL Purple cap

2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணிக்காக ஆர் பி சிங் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த இந்த விருதை வாங்கினார். 2010 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் வீரர் பிரக்யான் ஒஜாவும், 2011 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்காவும் இந்த பர்பிள் நிற தொப்பியை வாங்கினார்கள்.

2012 ஆம் ஆண்டு தற்போதைய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்க்கல் டெல்லி அணிக்காக விளையாடிய போது 25 விக்கெட் வீழ்த்தி இருந்தார். 2013ஆம் ஆண்டு சிஎஸ்கே வீரர் பிராவோ அதிகபட்சமாக 32 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் நிற தொப்பியை வென்றார். 2014 ஆம் ஆண்டு சிஎஸ்கே வீரர் மோகித் சர்மாவும், 2015 ஆம் ஆண்டு மீண்டும் பிராவோவும் பர்பிள் நிற தொப்பியை வென்று சாதனை படைத்தனர்.

2016 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டு புவனேஸ்வர் குமார் சன்ரைசர்ஸ் அணிக்காக பர்பிள் நிற தொப்பியை வென்று அசத்தினார். 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் ஆண்டிரூ டை பர்பிள் நிற தொப்பி வென்றார். 2019 ஆம் ஆண்டு சிஎஸ்கே வீரர் இம்ரான் தாகிர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியை கைப்பற்றினார். 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியின் ரபாடா, 17 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் நிற தொப்பியை வென்றார்.

2021 ஆம் ஆண்டு ஹர்சல் பட்டேல் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆர்சிபி அணிக்காக பர்பிள் நிற தொப்பியை வென்றார். 2022 ஆம் ஆண்டு ராஜாஸ்தான் அணிக்காக சாஹல் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் நிற தொப்பியை வென்றார். 2023 ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக விளையாடிய சமி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் தொப்பியை வென்றார். 2024 ஆம் ஆண்டு ஹர்சல் பட்டேல் 24 விக்கெட் வீழ்த்தி இம்முறை பஞ்சாப் அணிக்காக பர்பிள் நிற தொப்பியை வென்றிருந்தார்.

Story first published: Thursday, March 13, 2025, 17:41 [IST]
Other articles published on Mar 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+