For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK: தோனியின் 10 கட்டளைகள்.. இதை பின்பற்றினால் வெற்றி உறுதி.. முழு விவரம்

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் அடி பாதாளத்தில் இருக்கின்றது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.

ருதுராஜ் கேப்டனாக இருந்த நிலையில் நான்கு தோல்வி பெற்ற சிஎஸ்கே அணி தோனி வந்தவுடன் ஐந்தாவது தோல்வியை தழுவியது. இந்த தருணத்தில் சிஎஸ்கே அணி இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எஞ்சிருக்கும் எட்டிப் போட்டுகளில் சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று ஆக வேண்டும்.

MS Dhoni

ஆனால் இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதாலும் கவுரவமான இடத்தையாவது புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி பெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தோனி தங்களது அணி வீரர்களுக்கு பத்து கட்டளைகளை வெளியிட்டு இருப்பதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 10 கட்டளைகளும் தோனி ஏற்கனவே கூறியதுதான். இதை சரியாக பாலோ செய்தாலே சிஎஸ்கே அணி வெற்றி பெற முடியும் என்பது தான் கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. சரி அது என்னவென்று தற்போது பார்க்கலாம். டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் பவுலர்களின் பங்கு மிகவும் முக்கியம். எதிரணியின் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று அல்ல ஆறு ரன்கள் கொடுக்க வேண்டிய இடத்தில் நான்கு ரன்களும், நான்கு ரன்கள் கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரன்களும் விட்டுக் கொடுத்தாலே அணி வெற்றி பெற்று விடும்.

இதுதான் தோனியின் ஸ்டைல் தோனி எப்போதுமே பௌலர்களிடம் ஒரு சிக்சர் கொடுத்து விட்டாயா பரவாயில்லை, அடுத்த பந்தை சிக்ஸர் கொடுக்க விடாமல் என்ன செய்ய வேண்டுமோ அதை செய். இரண்டாவது பந்து பௌண்டரியாக முடிந்தாலும் இரண்டு ரன்கள் நமக்கு மிச்சம் ஆகிறது. இதை பாலோ செய்தால் பௌலர்களுக்கான அழுத்தம் பெரும் அளவு குறையும்.

இதேபோன்று கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற கேட்ச் என்பது மிகவும் முக்கியம். சில கேச்கள் போட்டியின் தலையெழுத்தையே மாற்ற கூடும். அந்த வகையில் கடினமான கேட்சை பிடிக்க வேண்டும் என்று அல்ல. கையில் வரும் கேட்சை விடாமல் இருந்தால் போதும். எனவே கேட்ச் பிடிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

மூன்றாவது விதி தேவையில்லாமல் ரன் அவுட் செய்கிறேன் என பந்தை எறியாதீர்கள். இதன் மூலம் கூடுதல் ரன்களை நாம் விட்டுக் கொடுக்க வேண்டியது வரும். உங்களால் அடிக்க முடியவில்லை. இல்லை நீங்கள் எறியும் பந்தை பிடிக்க எதிர்முனையில் வீரர் இல்லை என்றால் தயவு செய்து பந்து எறிய வேண்டாம் என்பதுதான். நான்காவது விதி எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிக அளவு டாட் பால் ஆடுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக பில்டர்கள் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூடியே கணித்து அதற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும். பில்டிங்கில் ஆக்டிவாக இருந்தால் நிச்சயம் அது பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஐந்தாவது விதி பேட்டர்ஸ்களுக்கானது. மற்ற அணி அதிரடியாக ஆடுகிறது என்பதால் நாமும் அதிரடியாக ஆட வேண்டும் என்பது அல்ல.

இல்லை ரசிகர்கள் சிக்ஸர் அடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பதால் நாமும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பது அல்ல. போட்டியின் சூழலை புரிந்து கொண்டு விளையாடினாலே வெற்றி பெற்று விடலாம். முடிந்தவரை பவர் பிளேவில் பெரிய ஷார்ட் ஆடி விக்கெட்டுகளை இழக்காமல் விக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு 50 ரன்கள் அடித்தாலே அது போதுமானது.

இல்லை என்றால் பின் வரிசையில் வரும் வீரர்களுக்கு அது நெருக்கடி ஏற்படுத்தும். தோனியின் ஆறாவது விதி கிரிக்கெட் என்பது தனி நபர்கள் விளையாடும் போட்டி கிடையாது. வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாட வேண்டும். ஒரு வீரர் இன்று சரியாக விளையாடவில்லை என்றால் அந்த பொறுப்பை நாம் எடுத்துக் கொண்டு அவருக்காக விளையாட வேண்டும். தோனியின் ஏழாவது விதி டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது என்பது மிகவும் முக்கியம்.

உங்களால் ரன் குவிக்க முடியவில்லை என்றாலும் பந்தை வீணடிக்காமல் சிங்கிள் ஆடுவது. டாட் பால் எவ்வளவு தடுக்கின்றோமோ அந்த அளவுக்கு வெற்றி பெற முடியும். இதனால் வீரர்கள் சிங்கிள்ஸ் அதிக அளவு ஓட வேண்டும். தோனியின் எட்டாவது விதி தான் மிகவும் முக்கியமானது. இதை சிஎஸ்கே அதிக அளவு செய்து வரும். ஒருவேளை உங்களால் பவுண்டரி சிக்சர் அடிக்க முடியவில்லை என்றால் ஓடியே 2 ரன்கள் எடுங்கள். ஆறு பந்துக்கு 6 டபுள் செடுத்தால் அந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்துவிடும். இல்லை ஐந்து டபுள் எடுத்து ஆறாவது பந்து ஒரு பவுண்டரியோ சிக்ஸர் எடுத்தால் எந்த ரிஸ்க்கும் இன்றி உங்களால் ஒரு ஓவரில் 15 ,16 ரன்கள் எடுக்க முடியும்.

ஆனால் கிரிக்கெட் களத்தில் டபுள்ஸ் ஓடுவது என்பது மிகவும் கடினம். இதற்கான பயிற்சியை நாம் முன்பே எடுத்துக் கொள்ள வேண்டும். தோனியின் ஒன்பதாவது விதி ஒவ்வொரு வீரர்களுக்கும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும். தொடக்க வீரர் என்றால் அவருக்கு ஒரு ரோல் நடு வரிசையில் களமிறங்கும் ஒரு வீரருக்கு ஒரு ரோல் டெட் பௌலிங் பவுலிங் செய்யக்கூடிய வீரருக்கு ஒரு ரோல் என தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும்.

தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் அதை அவர்கள் சரியாக செய்ய வேண்டும். மூன்றாவதாக இறங்கும் வீரர் அதிரடி காட்ட வேண்டும் என்ற பொறுப்பு வழங்கினால் அதை அவர் சரியாக செய்ய வேண்டும். டெத் பவுலர் யாக்கர் வீச வேண்டுமென்றால் அதை அவர்கள் சரியாக செய்ய வேண்டும். தோனியின் பத்தாவது விதி ஒரு போட்டியில் நாம் எப்போதுமே 100% சிறப்பாக செயல்பட்டிருக்க மாட்டோம். சின்ன சின்ன தவறுகள் செய்திருப்போம்.

நாம் அந்த போட்டியில் வெற்றியை பெற்றாலும் அந்த சின்ன தவறுகளை கவனித்து அதை அடுத்த போட்டியில் சரி செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலம் நாம் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை தொடர முடியும். சின்ன சின்ன விஷயங்களை சரி செய்தாலே நம்மால் பெரிய விஷயங்களை சாதிக்க முடியும். அதேபோல் வெற்றி வேண்டும் என்று விளையாடாமல் அடிப்படை விஷயங்களை சரியாக செய்தாலே வெற்றி கிடைக்கும் என்பதுதான் தோனியின் தாரக மந்திரம். இந்த பத்து கட்டளைகளையும் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் பின்பற்றினால் அவர் சிறந்த ஒரு வீரராக விளங்குவார்.

Story first published: Saturday, April 12, 2025, 23:14 [IST]
Other articles published on Apr 12, 2025
English summary
IPL 2025- MS Dhoni 10 commandments for CSK Players to win the Game
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+