Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: இளைஞர்களுக்கு இது தான் என் அட்வைஸ்.. 2 விசயத்தில் மோசம்.. CSK தோல்வி குறித்து தோனி வேதனை

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே நிர்ணயித்த இலக்கை 17 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் ராஜஸ்தான் அணி எட்டியது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, நாங்கள் இன்று பேட்டிங்கில் நிர்ணயித்த இலக்கு ஒரு நல்ல ஸ்கோராக நான் நினைக்கின்றேன். ஏனென்றால் விக்கெட்டுகளை நாங்கள் அதிக அளவு இழந்ததால் கீழ் வரிசை வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

MS Dhoni

விக்கெட்டுகள் அதிகம் இழப்பதன் மூலம் 20 ஓவரும் முழுமையாக விளையாட முடியாத நிலை ஏற்படும். ஆனால் பிரவீஸ் அபாரமாக விளையாடி சரியான வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை சேர்த்தார். எங்கள் அணியின் ரன் ரேட்டும் நன்றாக தான் இருந்தது. பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்தோம்.

கூடுதலாக விக்கெட் இழந்ததால் எங்களால் ரிஸ்க் எடுத்து விளையாட முடியவில்லை. கம்போஜ் பந்துவீச்சில் ஸ்விங் செய்வது கிடையாது. வெறும் வேகமாக பந்து வீசி செயல்படக்கூடிய வீரர் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு விளையாடுகிறார். அவர் நல்ல யாக்கர் பந்துகளை வீசுகிறார். ஆனால் பவர் பிளேவில் நாங்கள் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருகிறோம்.

முதல் ஆறு ஓவரில் இவ்வளவு அதிக ரன்களை விட்டுக் கொடுக்கக் கூடாது கம்போஜ் பவர் பிளேவில் மூன்று ஓவர்களை வீசினார். பந்து ஸ்விங் ஆகாத நிலையில் அது மிகவும் கடினமான ஒரு விஷயமாக நான் கருதுகிறேன். பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கன்சிஸ்டன்டுடன் விளையாட வேண்டும்.

உங்களால் சிக்ஸர்களை எந்த நிலையிலும் அடிக்க முடியும் .உங்களுக்கு நீங்களே அழுத்தத்தை செலுத்தி கொள்ளாதீர்கள். சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். விளையாட்டை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் என்னுடைய அறிவுரையாக இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என்று தோனி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 20, 2025, 23:53 [IST]
Other articles published on May 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+